Anna Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில், சவுந்தரபாண்டி சொன்னதை கேட்டு முத்துப்பாண்டி வேறொரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட தயாராகினர். ஆனால் எப்படியும் முத்துப்பாண்டி, இசக்கி விட்டு போக மாட்டார் என்ற நம்பிக்கையில் சண்முகம் குடும்பத்துடன் அதே கல்யாணத்திற்கு வந்தார். சண்முகம் எதிர்பார்த்தபடி முத்துப்பாண்டி அந்தப் பெண் கழுத்தில் தாலி கட்டும்பொழுது இசக்கியை பார்த்த அந்த ஒரு தருணத்தில் முத்துபாண்டி மனம் மாறிவிட்டது.
அதனால் இசக்கி இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று சொல்லி சௌந்தரபாண்டியை விட்டு ஒரேடியாக சண்முகம் வீட்டிற்கு மருமகனாக வாழ போய்விட்டார். இதனால் கோபம் அடைந்த சௌந்தரபாண்டி, நான் என்ன சொன்னாலும் என் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருந்த என் பிள்ளையை என்னிடம் இருந்து பிரித்து விட்டாயே, இனியும் உன்னை சும்மா விடக்கூடாது என்று கோபப்பட்டு இசக்கியை கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விட்டார்.
இது எதுவும் தெரியாத சண்முகம் குடும்பத்தில் இருப்பவர்கள் கோயிலுக்கு வந்து விட்டார்கள். அங்கே மாறு வேஷத்தில் தன்னுடைய அக்காவை கூட்டிட்டு வந்த சௌந்தரபாண்டி வெறிகொண்டு இசக்கியை குறி வைத்தார். அந்த சமயத்தில் எல்லோரும் அசந்த நேரத்தில் சௌந்தரபாண்டி இசக்கியை கொலை செய்வதற்கு தயாராகி விட்டார். ஆனால் இசக்கி அவருடைய உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சௌந்தரபாண்டியனை எதிர்க்கத் துணிந்து விட்டார்.
அந்த வகையில் இரண்டு பேரும் சண்டை போட ஆரம்பித்த நிலையில் சௌந்தரபாண்டி கடைசி நேரத்தில் இசக்கியை நெருங்கும் பொழுது சிவபாலன் வந்து அப்பா என்று கூட பார்க்காமல் தப்பு பண்ணியதற்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் சௌந்தரபாண்டியனை குத்தி விடுகிறார். இதனால் அதிர்ச்சியான இசக்கி, சிவபாலனை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கையில் அந்த கம்பியை எடுத்துக் கொண்டார்.
இதைப் பார்த்த முத்துப்பாண்டி, இசக்கி தான் அப்பாவை கொலை செய்திருக்கிறார் என்று புரிந்து கொண்டு இசக்கி கையில் கைவிளங்கை மாட்டிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விடுகிறார். ஆனால் சண்முகத்துக்கு தெரியும் இசக்கி மீது எந்த தவறும் இருக்காது என்று. இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் சௌந்தரபாண்டி பிழைத்துக் கொண்டார்.
பிறகு இதற்கு காரணமானவர் சிவபாலன் தான் என்று தெரிந்ததும் சண்முகம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கைவிளங்கை முத்துப்பாண்டியிடம் சொல்லுகிறார். உடனே முத்துப்பாண்டி, நான் உன்னை புரிஞ்சுக்காமல் அவசரப்பட்டு அரெஸ்ட் பண்ணது தவறுதான் என்னை மன்னித்துவிடு என்று கெஞ்ச ஆரம்பித்து விடுகிறார். இசக்கியும், உங்க மேல எந்த தப்பும் இல்லை மாமா என்று சொல்லி சமாதானம் ஆகி விடுகிறார். அடுத்ததாக சிவபாலன் போலீஸ் ஸ்டேஷனில் வந்து சரண்டர் ஆகி விடுகிறார்.