வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

உருகி உருகி காதலித்த சிவாஜி – பத்மினி.. சேராமல் போனதற்கு இப்படி ஒரு காரணமா?

Sivaji – Padmini: சினிமாவில் ஒன்றாக நடிப்பவர்கள் காதல் வயப்படுவது என்பது இயல்பான ஒன்று. இன்றைய காலகட்டத்தில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையை சேர்ந்த நிறைய நடிகர்கள் உடனடிக்கும் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் 20 வருடத்திற்கு முந்தைய சினிமா காதல் என்பது இவ்வளவு எளிதாக இருந்ததில்லை.

நடிகர்கள் மற்றும் நடிகைகளாக இருந்தாலும் இவர்களுடைய காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை என்பது அவர்களுடைய குடும்பத்தை சார்ந்ததாகவே இருந்தது. இதனால் சினிமா நட்சத்திரங்களின் பல காதலர்கள் சேராமல் போனதாக நிறைய கதைகள் சொல்லப்படும். அப்படி ஒரு காதல் கதை தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி உடைய கதை.

Also Read:உலகநாயகன் அறிமுகப்படுத்திய 6 தொழில்நுட்பங்கள்.. தேவர் மகன் படத்தில் இப்படி ஒரு டெக்னாலஜி இருந்ததா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கே ஆர் விஜயா, சரோஜாதேவி, சாவித்திரி, தேவிகா, சௌகார் ஜானகி என அப்போதைய முன்னணி நடிகைகள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் அவருக்கு கரெக்டான கதாநாயகியாக இருந்தவர் நடிகை பத்மினி. இந்த ஜோடி உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று அப்போதைய சினிமா ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி இருந்தது.

ஒரு காலகட்டத்தில் இவர்கள் இருவரும் உண்மையிலேயே காதலித்ததாக நிறைய பத்திரிகைகள் அப்போது எழுத ஆரம்பித்தன. இருந்தாலும் சிவாஜி தன்னுடைய உறவுக்கார பெண்ணான கமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சிவாஜி மற்றும் பத்மினி இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

Also Read:ஒரே வருடத்தில் 8 மெகா ஹிட் படங்களா.. வெள்ளி விழா நாயகனாக அலறவிட்ட சிவாஜி

பத்மினி சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் செட்டில் ஆகிய பிறகு ஒரு முறை அவரிடம் நீங்கள் ஏன் சிவாஜியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரொம்ப நேரம் யோசித்த பத்மினி, நாங்கள் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும், நான் வேறு ஜாதி அவர் வேறு ஜாதி என்று சொல்லி இயல்பாக அந்த பேச்சை முடித்து விட்டாராம்.

இவர்கள் இருவருடைய காதலுக்கும் தடையாக இருந்தது ஜாதி தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் அந்த சமயத்தில் பத்மினி நன்றாக சம்பாதித்து வந்ததால் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பத்மினிக்கு திருமணம் செய்து வைக்க விருப்பமும் இல்லையாம்இருவரும் வெவ்வேறு பாதையில் சென்ற பிறகும் தங்களுடைய தொழிலில் அது எந்த வகையிலும் பாதிக்காத அளவிற்கு சேர்ந்து நடித்து பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள்.

Also Read:சென்டிமென்ட்டாக 43 நாட்களுக்குள் வெளியான 6 படங்கள்.. முதலும் கடைசியுமாக சிவாஜி செய்த சாதனை

Trending News