போக் ரோட்டில் உள்ள சிவாஜியின் அன்னை இல்லத்திற்கு இப்பொழுது ஆபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 24 கிரௌண்ட் அதாவது ஒன்றரை ஏக்கர் பராபளப்பு கொண்ட அன்னை இல்லத்தை ஜப்தி செய்யுமாறு கோர்ட் உத்தரவு போட்டுள்ளது. இதற்கு முழு காரணமாய் துஷ்யந்த் ராம்குமாரை குற்றம் சாட்டி வருகிறார்கள்.
1960களில் சிவாஜி கணேசனின் தம்பி சண்முகம் என்பவர் அண்ணனுக்காக இந்த வீட்டை சுமார் ரெண்டு லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். இரண்டு வருடங்களாக உள் வேலை செய்து தேக்கு மரக்கட்டைகளை இழைத்து அதனை அழகுபடுத்தி கொடுத்துள்ளார்.
அதன் பிறகு தான் அந்த வீட்டில் சிவாஜி கணேசன் குடும்பத்தோடு குடியேறியுள்ளார். கும்பகோணம் பட்டணம் பொடி முதலியார் தான் அந்த வீட்டுக்கு முதல் சொந்தக்காரர். அவரிடம் இருந்துதான் வாங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் ஜார்ஜ் டவுன் போக் என்ற கவர்னரும் அந்த வீட்டில் தான் வசித்து வந்துள்ளார்.
இப்படி பழமையான பல பெருமைகளை கொண்ட அந்த வீடு சிவாஜி கணேசனின் மகன் வழிப்பேரன் ராம்குமாரின் வாரிசான நடிகர் துஷ்யந்த்தால் ஜப்தி செய்யும் அளவிற்கு வந்துள்ளது. சக்சஸ், மச்சி, தீர்க்கதரிசி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் துஷ்யந்த்.
துஷ்யந்த்திற்கு படம் தயாரிக்கும் ஆசை வந்துள்ளது. விஷ்ணு விஷாலையை வைத்து ஜெகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்து வந்தார். அந்த படத்திற்காக தனலட்சுமி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் 5 கோடிகள் கடன் வாங்கியுள்ளார். அதை கட்ட முடியாமல் இன்று வட்டி என சேர்த்து 9 கோடிகளாக மாறி உள்ளது. இதனால்தான் அந்த வீட்டிற்கு இப்படி ஒரு ஆபத்து வந்துள்ளது.