சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சிவாஜியின் மறக்க முடியாத 5 வரலாற்று படங்கள்.. வரி கேட்ட வெள்ளைக்காரனுக்கு சவுக்கடி கொடுத்த நடிகர் திலகம்

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு பெயர் வாங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் வரலாற்று மிகுந்த கதைகளாகவும் மற்றும் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை எடுத்து தத்ரூபமாக நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட அவருடைய மறக்க முடியாத ஐந்து வரலாற்றுப் படங்களை பற்றி இங்கு பார்ப்போம்.

கப்பலோட்டிய தமிழன்: 1961 ஆம் ஆண்டு வெளிவந்த கப்பலோட்டிய தமிழன் வரலாற்று மிகுந்த திரைப்படமாகும். இப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேசிய திரைப்பட விருது கிடைத்தது. இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சுப்ரமணிய பாரதி எழுதிய கவிதைகளை அடிப்படையாகக் கொண்டவை. இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.

Also read: முதல்முறையாக வெளிவந்த கலர் பயோபிக் திரைப்படம்.. எல்லாத்துக்கும் குருவான சிவாஜி

வீரபாண்டிய கட்டபொம்மன்: 1959 ஆம் ஆண்டு வெளிவந்த வீரபாண்டி கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை. இந்த படத்தில் வரும் அனைத்து வசனங்களும் வரி கேட்ட வெள்ளைக்காரனுக்கு சவுக்கடி கொடுத்த வகையில் அனைவரும் ரசித்துப் பார்க்கும் வகையில் தத்ரூபமாக நடித்தார். இதில் அவர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகவே வாழ்ந்திருப்பார் என்று அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

அரிச்சந்திரன்: 1968 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் புராணக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இவர் வாழ்நாளில் யாரிடமும் பொய் சொன்னதில்லை,சொல்லவும் மாட்டேன் என்று இருந்த இவரை விசுவாமித்ரன் பல வழிகளில் துன்புறுத்தி முயற்சி செய்வார். ஆனால் கடைசிவரை இவர் தனது வார்த்தைகளை காப்பாற்றி உண்மையை மட்டும் சொல்லும் அரிச்சந்திரனாக நடித்திருப்பார்.

Also read: 17 வயதிலேயே நடிகர் திலகத்திற்கு கிடைத்த பெயர்.. சிவாஜியின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

சம்பூர்ண ராமாயணம்: 1958 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முழுமையான ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் ராமராக என்.டி. ராமராவ் மற்றும் பரதனாக சிவாஜி கணேசனும் நடித்திருப்பார்கள். இது வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. மேலும் இத்திரைப்படம் 264 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. இதன் மூலம் வெள்ளி விழா படமாகவும் இது அமைந்தது.

கர்ணன்: 1964 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புராண கதையை மையமாகக் கொண்டது. இதில் சிவாஜி கணேசன், என்.டி ராமராவ், முத்துராமன் மற்றும் சாவித்திரி ஆகியோர் நடித்திருப்பார்கள். இது இதிகாசமான மகாபாரதத்தில் வரும் கர்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது ஈஸ்ட்மேன்கலரை பயன்படுத்தி தமிழில் முதன் முதலில் வண்ணமயமாக்கப்பட்ட திரைப்படமாகும்.

Also read: 50 ஆண்டுகளில் 1000 படங்கள்.. நாகேஷ் நடிப்பில் வெள்ளி விழா கண்ட 10 படங்கள்

Trending News