சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

அழகான தலை முடியை அடிக்கடி மாற்றும் சிவாஜி.. விக் வைத்து கஷ்டப்பட்டதன் பின்னணி

தமிழில் மட்டும் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து நடிப்பில் ஜாம்பவானான செவாலியர் சிவாஜி கணேசன் எப்பொழுதுமே படத்தின் கதையைக் கேட்ட பின், இந்த கதாபாத்திரத்திற்கு நான் இப்படித்தான் இருக்கவேண்டும் என அந்த கெட்டப்பிவிற்காக மெனக்கெடுவாராம்.

அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப எப்படி இருக்க வேண்டும் என்று சிகை அலங்காரத்தையும் அதற்கு ஏற்ப விக்கையும் அவரே தேர்ந்தெடுத்து விடுவாராம். படத்திற்கு ஏற்ற கதாபாத்திரத்திற்கு பொருத்தமான விக்குகளை அணிந்தபடி, படம் முழுவதும் தன்னுடைய மிடுக்கான தோற்றத்தை வெளி காட்டுவார்.

இதனால் தலையில் விக் அணிந்திருப்பதால் அரிப்பு எடுத்தாலும் தொடர்ந்து நான்கு ஐந்து மணி நேரங்கள் அப்படியே அந்த விக்கோடு இருப்பாராம். இதை சக நடிகர்கள் கண் கலங்கியபடி தெரிவித்துள்ளனர்.

மேலும் சிவாஜியின் நடிப்பு, மற்ற நடிகர்களை விட தனித்துவம் மிகுந்ததாகவும் அவருடைய உடல் மொழி மட்டுமன்றி அவரது கண், புருவம், நெற்றி, மூக்கு, கன்னம், உதடு என அனைத்துமே நடிக்கும்.

இப்படி நடிப்பில் ஜாம்பவானாக இருக்கும் சிவாஜிக்கு திரைப்பட உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும், பத்மஸ்ரீ, பத்மபூஷன் மட்டுமின்றி செவாலியர் விருதைப் பெற்ற முதல் நடிகராகவும் திகழ்ந்தார்.

இப்படிப்பட்ட பெருமைக்குரிய நடிகர் திலகம் சிவாஜி படத்தில் மட்டும் இல்லை நிஜ வாழ்விலும் தங்கமான மனிதராம். எனவே ஒரு நாடக நடிகராக மேடை ஏறிய சிவாஜி, நடித்த ஒவ்வொரு படத்திற்கும் தன்னுடைய முழு பங்களிப்பை அளித்ததுதான் அவர் சினிமாவில் கொடிகட்டி பறந்ததற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

Trending News