
Sivakarthikeyan: ‘ துப்பாக்கியை புடிங்க சிவா’ கடந்த வருடம் தமிழ் சினிமாவை புரட்டி போட்ட வசனம் இது. விஜய் கையில் துப்பாக்கியை கொடுத்தது, மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக்கில் அமரன் படத்தில் நடித்தது என இரண்டுமே சிவகார்த்திகேயனுக்கு ஜாக்பாட் ஆக அமைந்தது.
விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக சிவகார்த்திகேயனை அடுத்த தளபதி என பில்டப் கொ.டுத்து தொடர்ந்து அவருக்கு நல்ல பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தது.
சூர்யா நடிக்க இருந்த பராசக்தி படத்தை சிவகார்த்திகேயனை நம்பி கொடுத்தார் சுதா கொங்கரா அத்தனைக்கும் பிள்ளையார் சுழி போட்டது என்னவோ விஜயின் அந்த வசனம் தான்.
துப்பாக்கியை கொடுத்தது இந்த பந்தயத்துக்கு தானா?
சினிமாவை விட்டு விலகும் நேரத்தில் இப்படி ஒரு விஷயத்தை சொல்லி சிவகார்த்திகேயனை உச்சாணி கொம்புக்கு கொண்டு சென்றார்.
ஆனால் தானம் கொடுக்கும் மாட்டை பல்லை பிடித்து பதம் பார்ப்பது போல் ஒரு வேலையை திட்டமிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது பராசக்தி படம் உருவாகி வருகிறது. இதேபோல் விஜய் நடிப்பில் ஜனநாயகன் படமும் தயாராகி வருகிறது.
விஜயின் ஜனநாயகன் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் நிலையில் அதே நாளை லாக் செய்கிறது பராசக்தி பட குழு. இதைத்தான் வளர்த்த கிடா மாறில் பாய்கிறது என்று சொல்வார்கள் போல.