திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

கௌதம் மேனனை பின்னுக்கு தள்ள வரும் லோகேஷ்.. சிக்கி சின்னா பின்னமாக போகும் SK

Lokesh Kanagaraj : லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் தலைவர் ரஜினியை வைத்து கூலி படத்தை எடுத்து வருகிறார். மோஸ்ட் வான்டெட் இயக்குனராக இருந்த லோகேஷுக்கு லியோ படம் சிறு சருக்களை கொடுத்தது. இந்நிலையில் திடீரென நடிகர் அவதாரம் லோகேஷ் எடுத்திருந்தார்.

அதாவது ஸ்ருதிஹாசன் உடன் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். அதில் மோசமான காட்சிகளில் நடித்திருந்ததால் லோகேஷுக்கு எக்கச்சக்க நெகட்டிவ் விமர்சனங்களும் வந்திருந்தது. பெரும்பாலும் டைரக்டர்கள் வில்லன் அவதாரம் எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் மிஸ்கின் வில்லனாக தொடர்ந்து நடித்து வருகிறார். அதேபோல் கௌதம் வாசுதேவ் மேனனும் டைரக்ஷனை காட்டிலும் இப்போது படங்களில் நடிக்க தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். லோகேஷின் லியோ படத்தில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நடித்திருந்தார்.

லோகேஷிடம் மாட்டிக் கொள்ளும் சிவகார்த்திகேயன்

இப்போது கௌதம் மேனனை ஓரம்கட்ட முரட்டு வில்லனாக களம் இறங்குகிறார் லோகேஷ். அதாவது இயக்குனர் சுதா கொங்கரா தனது கனவு படமான புறநானூறு படத்தை எடுக்க இருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஸ்ரீலிலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில் படத்திற்கான போட்டோ ஷூட் சமீபத்தில் நிறைவடைந்து உள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக லோகேஷ் தான் கமிட்டாகி இருக்கிறார். லோகேஷிடம் மாட்டிக்கொண்டு சிக்கி சின்னா பின்னமாக உள்ளார் எஸ் கே.

ஏனென்றால் லோகேஷ் இயக்குனராக பணியாற்றிய படங்களிலேயே வில்லன் கதாபாத்திரம் படு பயங்கரமாக இருக்கும். அதுவும் லியோ படத்தை எல்லாம் சொல்லவே வேண்டாம். இப்படி இருக்கும் சூழலில் லோகேஷ் வில்லனாக இறங்குகிறார் என்றால் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புது அவதாரம் எடுக்கும் லோகேஷ்

Trending News