ஒரு காலத்தில் சினிமா நட்சத்திரங்களில் விஜய் சேதுபதி மிகவும் பிசியாக வலம் வந்தார். எந்த விதமான கதாபாத்திரம் என்றாலும் ஒத்துக் கொள்வார். வில்லன், கெஸ்ட் ரோல், என யார் கூப்பிட்டாலும் நடிக்க சம்மதித்து விடுவார். வருடத்திற்கு எப்படியும் 10 படங்களில் தலைகாட்டி விடுவார்.
விஜய் சேதுபதியை போல் இப்பொழுது சிவகார்த்திகேயனின் லைன் அப் நீண்டு கொண்டே போகிறது . 2026 வரை கடும் பிஸியாக இருக்கிறார். தற்சமயம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் “அமரன்” படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது..
எஸ் கே கையில் இவ்வளவு படங்களா?
இப்பொழுது ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்கு எஸ் கே 23 என்று பெயர் வைத்துள்ளனர். இதை முடிந்தவுடன் வெங்கட் பிரபுவிற்கு ஒரு படம் பண்ணுகிறார். இப்படி அடுத்தடுத்து மூன்று படங்கள் கையில் உள்ள நிலையில் இவரது கால் சீட் கிடைப்பது மிகவும் குதிரை கொம்பாக இருக்கிறது.
வெங்கட் பிரபு படத்திற்கு பின் இவரது நண்பர் “டான்” படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்திக்கு ஒரு படம் பண்ணுகிறார். “டான்” படத்திற்கு பின்னர் சிபி சக்கரவர்த்தி சிறிது காலம் வாய்ப்பில்லாமல் கஷ்டப்பட்டார். ரஜினி படம் இயக்கும் வாய்ப்பு வந்தும் கூட அதிலிருந்து நிராகரிக்கப்பட்டார்.
ரஜினி சிபி சக்கரவர்த்தியின் ஆட்டிட்யூட் சரி இல்லை என நிராகரித்து விட்டார். இப்பொழுது சிவகார்த்திகேயன் அவருக்காக பாஸ் என்ற ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதன் பெண் சிவா, சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் கமிட்டாய் இருக்கிறார். இதையெல்லாம் முடித்துவிட்டு அயலான் இரண்டாம் பாகமும் பண்ணுகிறார். இப்படி 2026 வரை கையில் ஆறு படங்கள் வைத்திருக்கிறார் எஸ்.கே.
- சிவகார்த்திகேயன் செய்த தவறால் சூரிக்கு வைக்கும் செக்
- பொறாமை தீயில் பொசுங்கிய சிவகார்த்திகேயன்
- சூர்யாவை ஓவர் டேக் செய்து விஜய் இடத்தை பிடிக்கும் சிவகார்த்திகேயன்