புதன்கிழமை, ஜனவரி 15, 2025

போற போக்குல தனுஷை குத்தி காட்டிய சிவகார்த்திகேயன்.. காத்திருந்து பழி தீர்த்தாரா SK.?

Sivakarthikeyan: ரஜினி கமல், விஜய் அஜித், போல் தனுஷ் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இடையே நீண்ட காலமாக ஒரு பனிப்போர் நடந்து வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாக இருந்தாலும் இவர்களின் ரசிகர்கள் ஏதாவது ஒரு பஞ்சாயத்தை ஆரம்பித்து விடுவார்கள்.

ஆனால் இப்போது சிவகார்த்திகேயனே சர்ச்சையை கிளப்பும் படியாக ஒரு விஷயத்தை சொல்லி இருப்பது தான் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இன்று இவர் தயாரிப்பில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதில் பேசிய சிவகார்த்திகேயன் நான் யாருக்கும் வாழ்க்கை கொடுக்கவில்லை. தன்னுடைய நண்பர்களை அறிமுகப்படுத்துவது போல் தான் என் படத்தில் நடிக்க வைக்கிறேன். ஏனென்றால் நான் தான் சிவகார்த்திகேயனுக்கு வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்லி சிலர் பழகி விட்டார்கள்.

அந்த மாதிரி ஆள் நான் கிடையாது. நான் யாரையும் கண்டுபிடிக்கவும் இல்லை அடையாளப்படுத்தவும் இல்லை என்று சிரித்துக் கொண்டே பேசி இருந்தார். அதுதான் இப்போது சோசியல் மீடியாவில் தீயை பற்ற வைத்திருக்கிறது.

தனுசை சீண்டிய சிவகார்த்திகேயன்

ஏனென்றால் தனுஷால் தான் சிவகார்த்திகேயன் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்ற பேச்சு நெடுங்காலமாகவே இருக்கிறது. தனுஷ் இப்படி சொல்லவில்லை என்றாலும் அவருடைய ரசிகர்களும் சரி சினிமா விமர்சகர்களும் சரி இப்படி ஒரு விஷயத்தை அடிக்கடி பதிவு செய்வார்கள்.

சிவகார்த்திகேயன் பெரிய ஹீரோவாக வளர்ந்த பிறகும் கூட தனுஷோடு போட்டி போடுகிறார் வளர்த்து விட்டவரை மதிக்கவில்லை என்றெல்லாம் பேச்சு கிளம்பியது. இந்த வருட தொடக்கத்தில் அயலான், கேப்டன் மில்லர் போட்டி போட்ட போது கூட இப்படித்தான் பேசப்பட்டது.

அதை மனதில் வைத்து தான் சிவகார்த்திகேயன் போற போக்கில் தனுஷை குத்தி காட்டி இருக்கிறாரோ என்ற சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது. ஆக மொத்தம் அவர் எதார்த்தமாக வார்த்தையை விட்டாரா அல்லது காத்திருந்து பழி தீர்ப்பதற்காக இப்படி பேசினாரா என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால் இதனால் இரு தரப்பு ரசிகர்களும் தற்போது மாறி மாறி சண்டையிட்டு வருகின்றனர்.

மீண்டும் வெடித்த தனுஷ், சிவகார்த்திகேயன் சர்ச்சை

Trending News