கோட் படம் இன்று ரிலீஸ் ஆகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகல்கிறது என மொத்த ஆடியன்ஸ்சும் கூறி வருகின்றனர். வெங்கட் பிரபு இந்த படத்தில் இரண்டாம் பாகத்திற்கும் கிளைமேக்ஸ் காட்சிகளில் லீட் கொடுத்திருக்கிறார்.
படத்தில் வெங்கட் பிரபு டீமில் உள்ள அனைவரும் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி அமரனிலிருந்து வைபவ் வரை அனைவருக்கும் கதாபாத்திரம் கொடுத்து இருக்கிறார் வெங்கட் பிரபு. படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் சயின்டிஸ்ட்டாக வருகிறாராம்.
விஜய் இந்த படத்தில் அவருடைய அரசியல் பிரவேசத்தையும் இரண்டு இடத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறார். விஜய் மற்றும் பிரேம்ஜி அமரன் இருவரும் ஒரு காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள் . அந்த காரின் நம்பர் பிளேட் CM 2026 என பதிவிட்டு இருக்கும்.
உங்க வேலை எனக்குன்னு சொல்லும் எஸ்.கே
இந்த நம்பர் பிளேட் எண் ஐடியா அவருக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கொடுத்ததாக கூறுகின்றனர். இதுவும் போக படத்தின் இறுதி கட்ட காட்சியில் சிவகார்த்திகேயன் வருகிறார். அவரும் தளபதியை நோக்கி உங்களுக்கு இதைவிட முக்கியமான வேலை இருக்கிறது. அதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார்.
சிவகார்த்திகேயன் இப்படி சொல்வதில் இருந்து விஜய் அரசியலுக்கு சென்று விட்டால் அவருடைய சினிமா வெற்றிடத்தை தான் நிரப்புவதாக ஒரு நக்கல் வசனத்தை கூறுகிறார். இப்படி இரண்டு இடத்தில் விஜய்யின் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள் வருகிறது.
- வொர்க் அவுட் ஆனதா விஜய், வெங்கட் பிரபுவின் மேஜிக்.?
- டிக்கெட் 2000 ரூபாயா.!
- GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் விஜய் இல்லை