Sivakarthikeyan and Soori: திறமை இருந்தால் யார் வேணாலும் எப்ப வேண்டுமானாலும் வெற்றியை பார்க்கலாம் என்பதற்கு உதாரணமாக சூரி சினிமாவிற்குள் காமெடி நடிகராக நுழைந்து தற்போது கதையின் நாயகனாக ஜெயித்து விட்டார். அதுவும் இவர் ஹீரோவாக நடித்த விடுதலை மற்றும் கருடன் படங்கள் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி சூரியை கொண்டாடி விட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார். அடுத்ததாக பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் மலையாள நடிகையான அன்னா பென் கூட்டணியில் கொட்டுக்காளி படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் 74 ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு 16 பிப்ரவரி 2024 அன்று திரையிடப்பட்டது.
சிவகார்த்திகேயனால் சூரி படத்துக்கு தடங்கள்
இதனைத் தொடர்ந்து இப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் தற்போது ரிலீஸ் ஆவதில் ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அதுவும் யாராலே என்றால் சிவகார்த்திகேயன் செய்த தவறால் சூரிக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை. அதாவது இடையில் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் மிகப்பெரிய கடனில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
அந்த வகையில் கடனில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்த சிவகார்த்திகேயனுக்கு, மறுபடியும் அயலான் படத்தின் மூலம் ஒரு பிரச்சனை கிளம்பி இருக்கிறது. அதாவது இந்த வருட துவக்கத்தில் வெளிவந்த அயலான் படம் கலையான விமர்சனங்களை பெற்றதால் படத்தின் டிஸ்ட்ரிபியூட்டருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இதனால் இப்படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர் என்னுடைய நஷ்டத்தை சரி செய்யும் விதமாக சிவகார்த்திகேயன் எனக்கு 8 கோடி கொடுக்க வேண்டும்.
அப்பொழுதுதான் அவர் தயாரித்து வரும் கொட்டுக்காளி படத்தை ரிலீஸ் பண்ண முடியும் என்று செக் வைத்து விட்டார். இதனால் இப்பொழுது என்ன பண்ணுவது என்று தெரியாமல் சிவகார்த்திகேயன் தவித்து வருகிறார். ஏனென்றால் இப்பொழுது தான் கடனில் இருந்து மெல்ல மெல்ல வெளியே வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சூரி நடித்த கொட்டுக்காளி படம் ரிலீஸ் ஆகிவிட்டால், அதன் மூலம் ஏகப்பட்ட லாபத்தை பார்க்கலாம் என்ற ஒரு ஆசையில் காத்துக் கொண்டிருந்தார்.
தற்போது இவருடைய ஆசைக்கு ஆபத்து ஏற்படும் விதமாக விட்ட குறை தொட்ட குறையாக சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் பிரச்சினை ஆட்டி படைக்கிறது. இதனால் கொட்டுக்காளி படத்தை ரிலீஸ் பண்ணுவதில் தடங்கள் ஏற்பட்டு இருக்கிறது.
கதையின் நாயகனாக ஜொலித்துவரும் சூரி
- பெரிய கைகளுடன் மோத தயாரான சூரியின் போஸ்டர், எப்ப தெரியுமா.?
- ஹீரோவாக ஜொலித்த சிம்புவை ரெண்டே படத்தில் ஒதுக்கிய சூரி
- சூரிக்காக போட்டி போடும் சூர்யா Vs சிவகார்த்திகேயன்