திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சிவக்குமாருக்கு கிடைக்காமல் போன 2 தேசிய விருதுகள்.. ஜெயித்துக் காட்டிய மாறன் சூர்யா

சூரரைப் போற்று என்ற திரைப்படத்தின் மூலம் பலரின் பாராட்டுகளையும் பெற்ற சூர்யாவுக்கு தற்போது தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தின் போது பல பிரச்சனைகளுக்கு நடுவில் அந்த படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படம் ஐந்து தேசிய விருதுகளை தட்டி தூக்கியுள்ளது. இதனால் ஒரு நடிகராக மட்டுமின்றி படத்தை தயாரித்த தயாரிப்பாளராகவும் சூர்யாவுக்கு திரையுலகில் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சூர்யா இந்த விருதின் மூலம் அவருடைய அப்பா சிவக்குமாரை மிகவும் பெருமைப்படுத்தி இருக்கிறார்.

60 காலகட்ட தமிழ் சினிமாவில் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்த சிவகுமார் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் கதாபாத்திரமாகவே மாறி உணர்ச்சி ததும்ப நடிக்கும் இவருடைய திறமையும், வசன உச்சரிப்பும் அத்தனை அற்புதமாக இருக்கும்.

இதுவே அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று கொடுத்திருக்கிறது. ஆனால் அவர் இதுவரை ஒரு முறை கூட தேசிய விருது பெற்றது கிடையாது. இவரின் நடிப்பில் எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்பு அபாரமாக இருக்கும்.

செம்பட்டை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிவக்குமாருக்கு அப்படத்திற்காக தேசிய விருது கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அந்த விருது கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த மறுபக்கம் என்ற திரைப்படத்தில் அவருடைய நடிப்பு வேற லெவலில் இருந்தது.

இதற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களிலேயே அக்னிபாத் என்ற படத்திற்காக அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இதை பார்த்த சிவகுமார் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் அதிர்ச்சி அடைந்தது. அப்போது அரசின் இந்த முடிவு சில அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு சிவகுமாருக்கு இப்போது வரை தேசிய விருது கிடைக்கவில்லை. அப்போது சிவகுமாருக்கு கைநழுவி போன அந்த விருது இப்போது சூர்யாவின் மூலம் அவரது வீடு தேடி வந்திருக்கிறது. இதன் மூலம் சூர்யா தன் அப்பாவை மகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.

Trending News