செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

சிவகுமார் மார்க்கெட்டையே கேள்விக்குறியாக்கிய ரஜினி.. அப்பன் விசிலயே கேட்டவன்னு விலகிய கங்குவா

சிவக்குமார் மற்றும் ரஜினி இருவரும் அந்த காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒன்றாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர்கள். இப்படி போய்க்கொண்டிருக்கும் போது சிவக்குமார் ஏற்று நடித்த ஒரே கதாபாத்திரத்தால் அவரது சினிமா கேரியர் கேள்விக்குறியானது.

புவனா ஒரு கேள்விக்குறி படத்தில், எப்பொழுதுமே வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஹீரோவாகவும். அதுவரை எல்லா படங்களிலும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த சிவக்குமார் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். ஆனால் அப்படி நடிப்பதற்கு ரஜினிகாந்த் முதலில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அந்த படத்தின் இயக்குனர் எஸ் பி முத்துராமன், இப்படி கதாபாத்திரங்களை எதிர்மறையாக நடிக்க வைத்திருந்தார். படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்திற்குப் பிறகு ரஜினி நிறைய படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அதே சமயம் மறுபக்கம் சிவக்குமாருக்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது.

அதேபோல் அந்த காலகட்டத்தில் சிவகுமாரின் சினிமா கேரியர் டல்லடித்தது. அதன் பின் மீண்டு வந்தார் சிவக்குமார். இப்பொழுது ரஜினியின் வேட்டையன் படம் அக்டோபர் 10 அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. எப்போதுமே ரஜினி படங்கள் என்றால் முதல் பத்து நாட்கள் வசூல் தூள் பறக்கும். மற்ற படங்களின் வசூல் பாதிக்கும். அதேபோல் தியேட்டர்கள் பற்றாக்குறை ஏற்படும்

அப்பன் விசிலயே கேட்டவன்னு விலகிய கங்குவா

இப்பொழுது சிறுத்தை சிவா, சூர்யா உட்பட பலத்த யோசனையில் ஒரு முடிவை எடுத்துள்ளனர். ரஜினியின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆவதால். வசூல் ரீதியாக கங்குவா டல் அடித்து விடும் என்பதால். கங்குவா படத்தின் ரிலீஸ்சை தள்ளி வைத்து விட்டனர். அக்டோபர் 10 ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி இந்த படம் முதலில் ரிலீஸ் ஆவதாக இருந்தது.

எப்பொழுதுமே ரஜினி மற்ற நடிகர்களுடன் போட்டி போடும் எண்ணம் கொண்டவர் இல்லை. ஆன்மீகப் பயணமாக ரிஷிகேஷ் சென்றிருந்த ரஜினி அங்கே சாதுக்களை சந்திக்கும்போதே படம் அக்டோபர் 10 ஆயுத பூஜை வெளியீடு என்று கூறிவிட்டாராம். இப்பொழுது வசூல் மற்றும் தியேட்டர் பற்றாக்குறையால் கங்குவா படம் பின்வாங்கியுள்ளது.

Trending News