புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சரக்கடித்து மட்டையான இயக்குனர்.. சூட்டிங்கில் ஏற்பட்ட குழப்பம், காப்பாற்றி விட்ட சிவகுமார்

வயதானாலும் இளமை மாறாமல் இருக்கும் ஒரு சில நடிகர்களில் சிவக்குமார் முக்கிய நடிகராக இருக்கிறார். தற்போது 81 வயதாகும் அவர் இன்னும் இளமையாக சுறுசுறுப்புடன் தான் இருக்கிறார். அதனாலேயே அவரை மார்க்கண்டேய நடிகர் என்று கூட கூறுவது உண்டு. அது மட்டுமல்லாமல் அவர் நடிப்பையும் தாண்டி பல விஷயங்களில் திறமையானவர்.

மேலும் நடிப்பு என்று வந்துவிட்டால் தன் முழு அர்ப்பணிப்பையும் அவர் கொடுத்துவிடுவார். அந்த வகையில் சிவாஜியிடம் இருக்கும் ஒரு உயர்ந்த குணமும் இவரிடம் இருக்கிறது. அதாவது சிவாஜி சூட்டிங் என்று வந்துவிட்டால் சரியான நேரத்திற்கு ஆஜராகி விடுவார். இன்னும் சொல்லப்போனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மேக்கப் போட்டு ரெடியாகி அமர்ந்து விடுவாராம்.

Also read: சிவாஜியை உதாசீனப்படுத்திவிட்டு எம்ஜிஆரிடம் சென்ற பிரபலம்.. கடைசியில் அவமானப்பட்டது தான் மிச்சம்

அதனாலேயே இயக்குனர் முதல் அத்தனை டெக்னீசியன்களும் சரியான நேரத்திற்கு சூட்டிங் வந்து விடுவார்கள். அதை அப்படியே சிவக்குமாரும் கடைப்பிடித்து வந்திருக்கிறார். ஆனால் ஒருமுறை சூட்டிங் ஸ்பாட்டில் குறிப்பிட்ட காட்சியை எடுக்க முடியாமல் போயிருக்கிறது. அப்போது சிவகுமார் செய்த விஷயம் தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

அதாவது அவர் பிரபல இயக்குனர் ஒருவரின் திரைப்படத்தில் நடித்து வந்திருக்கிறார். அப்போது மறுநாள் அதிகாலையில் சூரிய உதயத்தை படமாக்க வேண்டும் என்று பிளான் செய்து வைத்திருக்கின்றனர். அதற்காக சிவக்குமாரும் அதிகாலையிலேயே ரெடியாகி படப்பிடிப்பு தளத்துக்கு வந்திருக்கிறார். ஆனால் இயக்குனர் மட்டும் வரவே இல்லையாம்.

Also read: சிவாஜியுடன் நடித்து எம்ஜிஆர் உடன் நடிக்காமல் போன 5 நடிகைகள்.. கடைசி வரை ஆசைப்பட்ட ஸ்ரீதேவி

இதனால் அவரை தேடிச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. ஏனென்றால் அந்த இயக்குனர் நைட்டு அடித்த சரக்கால் மட்டையாகி போய் இருக்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் படக்குழுவினர் முழித்தபடி இருந்திருக்கிறார்கள். உடனே சிவக்குமார் சமயோசிதமாக யோசித்து உதவி இயக்குனரை அழைத்துக் கொண்டு படப்பிடிப்பு தளத்துக்கு சென்றிருக்கிறார்.

அங்கு டைரக்டர் இல்லாமலேயே உதவி இயக்குனரை வைத்து சூரிய உதயத்தை படமாக்கி இருக்கிறார்கள். அதன் பிறகு விஷயத்தை கேள்விப்பட்ட இயக்குனர் சிவகுமாருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இப்படி தக்க சமயத்தில் அவர் பொறுப்போடு நடந்து கொண்டது படக்குழுவினர் மத்தியில் பெரும் பாராட்டையும் பெற்றது. அந்த வகையில் இந்த சம்பவம் அவருடைய உயர்ந்த குணத்திற்கு உதாரணமாக அமைந்துள்ளது.

Also read: எம்ஜிஆரின் கல்லாபெட்டிய நிரப்பிய 5 படங்கள்.. சிவாஜியிடம் இருந்து திரும்பி ஓடி வந்த தயாரிப்பாளர்கள்

Trending News