Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்ததை ஒட்டி எழில் கயலுக்கு மறுபடியும் காதலை ப்ரொபோஸ் பண்ணுகிறார். ஆனால் இந்த நேரத்தில் கயலிடம் ஜோசியரின் மனைவி ஒரு உண்மையை சொல்கிறார். அதாவது உனக்கும் எழிலுக்கும் கல்யாணம் நடந்தால் எழில் உயிர்க்கு ஆபத்து.
ஆனால் இதை உன்னுடைய அம்மாவிடம் சொன்னால் உங்க அம்மா ரொம்பவே நொறுங்கிப் போய் விடுவார் என்று என் வீட்டுக்காரர் ஜோசியம் பார்த்தபோது உண்மையை மறைத்து விட்டார். அதனால் தயவு செய்து உன் காதலுக்காக எழிலுடைய உயிரை பறித்து விடாதே என்று சொல்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியான கயல் குழப்பத்துடனே கோவிலுக்கு போகிறார்.
எழில் அம்மா பற்றி தெரிந்து கொண்ட கயல்
கோவிலுக்கு போனதும் எனக்கு எழில்தான் முக்கியம். அதனால் அவரை கல்யாணம் பண்ண மாட்டேன். ஆனால் இதை எப்படி என்னுடைய வீட்டில் சொல்லி புரிய வைப்பேன் என்று தெரியவில்லை என மனம் வருத்தத்துடன் வேண்டிக்கிட்டு இருக்கிறார். அப்பொழுது ரவுடி கும்பல் கோவிலுக்குள் நுழைந்து கயலை கடத்திட்டு போகிறார்கள். ஆனால் இது செங்குட்டுவன் வேலையாகத்தான் இருக்கும்.
இங்கு கயல் அம்மா காமாட்சி இன்னும் மகள் வரவில்லை என்று கயலுக்கு போன் பண்ணி பார்க்கிறார். பிறகு கயலின் அண்ணன் மூர்த்தியும் கயலைத் தேடி ஒவ்வொரு இடமாக போகிறார். அத்துடன் இந்த தகவலை எழில் இடம் சொல்லி எழிலும் சேர்ந்து தேடிக்கொண்டு அலைகிறார்.
அடுத்ததாக கயலை கட்டி போட்டிருந்த இடத்திலிருந்து கயல் எப்படியோ தப்பிக்க முயற்சி எடுக்கிறார். அப்பொழுது ரவுடி கும்பல் மறுபடியும் கயலை பிடிக்க வரும்பொழுது அந்த இடத்திற்கு எழில் அம்மா சிவசங்கரி வந்து விடுகிறார். உடனே கயல், சிவசங்கரிடம் இந்த ரவுடிகள் என்னை கடத்துட்டு வந்துட்டார்கள் என்று உதவி கேட்கிறார்.
உடனே சிவசங்கரி அந்த ரவுடி கும்பலிடம் நாலு பேரு சேர்ந்து ஒரு பொண்ணு புடிச்சு கொல்வதற்கு வக்கில்லை என்று கேட்கிறார். இதை கேட்டதும் கயல் அப்படியே அதிர்ச்சியாகி இது என்ன இன்னும் இந்த மாமியார் திருந்தவில்லையா என்பதற்கு ஏற்ப நிற்கிறார். ஆக மொத்தத்தில் கயல் எழில் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று மறைமுகமாக செய்த சதிகள் அனைத்தும் எழிலின் அம்மா சிவசங்கரி தான் செய்திருக்கிறார் என்பது தெரிந்து விட்டது.
இது மட்டுமில்லாமல் எழிலின் உண்மையான ஜாதகத்திற்கு பதிலாக பொய்யான ஜாதகத்தை கொடுத்து குழப்பத்தை உண்டாக்கியதும் சிவசங்கரி தான். கடைசியில் கயிலை காப்பாற்றுவதற்கு எழில் வந்து விடுவார். அதே மாதிரி ஜாதகத்தில் செய்த சதி சிவசங்கர் தான் என்கிற உண்மையையும் கயலுக்கு தெரிந்து விடும். அதன் பின் யாரு நினைத்தாலும் எங்களுடைய கல்யாணத்தை தடுக்க முடியாது என்பதற்கு ஏற்ப கயல் எழிலை திருமணம் செய்து கொள்வார்.
கயல் சீரியலில் நடந்த சம்பவங்கள்
- Kayal: பெரியப்பாவோட கூட்டு சேர வில்லி அத்தை வந்தாச்சு
- ஜெயிலுக்கு போன வேதவல்லி, எழிலுக்கு வரும் பிரச்சினை
- பெரியப்பா-க்கு சங்கு ஊத நினைத்த வேதவல்லிக்கு கயல் வைத்த ஆப்பு