திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நல்ல ஒரு அந்தஸ்து இருந்தும் சினிமாவில் தோற்ற 6 இளசுகள்.. காணாமல் போன அஜித் தம்பி

சில நடிகர்கள் சினிமாவில் முன்னணி நடிகராக வருவதற்கு வாய்ப்பு கிடைத்தும் அதை தவற விட்டு தவித்து வருகிறார்கள். பின்பு ரசிகர்களிடையே பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று அதிலும் பிரயோஜனமில்லாமல் சுற்றுகிறார்கள். அப்படிப்பட்ட சில நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

அதர்வா: இவர் முரளியின் மகன் என்பதால் சினிமாவில் சுலபமாக நுழைவதற்கு ஒரு வழி கிடைத்தது என்றே சொல்லலாம். இவர் நடிப்பு வாழ்க்கையை பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தொடங்கினார். பின்னர் பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்து அதிக அளவில் பாராட்டுகளை பெற்றார். இந்தப் படம் இவர் சினிமா கேரியருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து இவர் ஒரு நல்ல நடிகர் என்ற பட்டத்தை பெற்றார். ஆனால் இதை சரியாக தக்க வைத்துக் கொள்ளாமல் பல சர்ச்சைகளில் சிக்கி கொஞ்சம் பெயரை கெடுத்துக் கொண்டார். இப்பொழுது இவர் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது.

மகத்: இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் வல்லவன், காளை என்ற படத்தில் சிம்புவின் நண்பராக நடித்திருப்பார். ஆனால் இந்த படத்தின் மூலம் இவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அடுத்து மங்காத்தா படத்தில் நடித்து மக்களிடம் பரிச்சயமானார். இதனைத் தொடர்ந்து தமிழில் பிரியாணி, ஜில்லா மற்றும் சில படங்களில் நடித்தார். இவர் என்னதான் படங்களில் நடித்தாலும் இவருக்கு அதில் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு முழுமையான ஹீரோ என்று அங்கீகரிக்கப்படாமல் சுற்றி வருகிறார். இவர் தமிழ் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதில் சில சர்ச்சைகளில் சிக்கியதால் 70 நாட்கள் கழித்து வெளியேற்றப்பட்டார்.

Also read: சூர்யா, அதர்வாவின் இடத்தை தட்டிப்பறித்த பாலாவின் அடுத்த ஹீரோ.. விறுவிறுப்பாக தொடங்கும் வணங்கான்

ஹரிஷ் கல்யாண்: இவர் 2010 ஆம் ஆண்டு சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் இவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். இதனால் 2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாவது ரன்னர்அப் ஆகினார். இதன் மூலம் இவருக்கு கொஞ்சம் ரசிகர்கள் கிடைத்தது. இதனை அடுத்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றார். மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

துருவ் விக்ரம்: நடிகர் விக்ரமனின் மகன் என்பதால் ஈசியாக படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது. இவர் நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். 2019 ஆம் ஆண்டு ஆதித்யா வர்மா என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன் பின் இவரது தந்தையுடன் மகான் படத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு என்னதான் இவருடைய அப்பா தயவு இருந்தாலும் இவரால் இப்பொழுது வரை ஒரு நல்ல நடிகர் என்ற நிலைமைக்கு வர முடியாமல் தவித்து வருகிறார்.

Also read: துருவ் விக்ரம் பண்ணும் சேட்டை.. அப்பா பெயரை காப்பாற்ற வேண்டாம், கெடுக்காம இருந்தா போதும்

நவ்தீப்: இவர் சினிமாவில் தெலுங்கு படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் தமிழில் அறிந்தும் அறியாமலும் என்ற படத்தில் நடித்தார். அடுத்து தொடர்ந்து தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தினார். அதன் பின் மீண்டும் தமிழில் நெஞ்சில், ஏகன், அ ஆ ஈ ஈ, படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து ஓரளவுக்கு பரிச்சயமானார். இவர் ஏகன் படத்தில் அஜித்திற்கு தம்பியாக நடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து ஓரிரு படங்களில் நடித்தார் ஆனால் அது பெரிய அளவிற்கு கை கொடுக்கவில்லை. அடுத்து எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் தெலுங்கு பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனாலும் அதில் வெற்றி பெற முடியாமல் இறுதிப் போட்டியாளராக வந்தார்.

ஜீவா: இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி இளைய மகன். இவர் 2003 ஆம் ஆண்டு ஆசை ஆசையாய் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். பிறகு ராம் படத்தில் நடித்ததற்காக சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றார். சிவாஜி கணேசனுக்கு பிறகு இந்த விருதை பெற்ற தமிழ் நடிகர் இவர் மட்டுமே. இதற்குப் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வெற்றி அடைந்தார். ஆனால் சமீபத்தில் இவர் படங்கள் அனைத்தும் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. இப்பொழுது ஒரு பொது தொலைக்காட்சியில் ரியாலிட்டி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

Also read: ‘அறிந்தும் அறியாமலும்’ நவ்தீப் சிக்ஸ் பேக் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்

Trending News