திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சினிமாவே வேண்டாம் என தெறித்து ஓடிய 6 ஹீரோயின்கள்.. சூப்பர் ஸ்டாருக்கு தங்கையான பின் சோலி முடிந்த கேரியர்

சில நடிகைகள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர்கள் முன்னணி நடிகைகளாக போட்டி போட்டு வலம் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் சினிமாவே வேண்டாம் என்று சில நடிகைகள் தெறித்து ஓடி விட்டார்கள். அப்படிப்பட்ட சில நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

சாய் பல்லவி: இவர் பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் அதிக அளவில் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. இவர் தமிழில் தனுஷ்க்கு ஜோடியாக மாரி 2 படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவருடைய நடனத்திற்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஆனாலும் இவர் சினிமாவில் நடிப்பதற்கு ராசி இல்லை என்று தமிழில் நடிப்பதை குறைத்து விட்டார்.

Also read: சாய் பல்லவியின் கார்கி ரசிகர்களை கவர்ந்ததா? கார்கி விமர்சனம்

அசின்: இவர் சினிமாவிற்குள் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இவரை யாரும் நெருங்க முடியாத அளவிற்கு டாப் நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தார். இவர் தமிழில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்பு இதனை தொடர்ந்து உள்ளம் கேட்குமே, சிவகாசி, போக்கிரி, தசாவதாரம், கஜினி போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் காவலன். அதன் பின் கஜினியின் வெற்றி படத்தை ஹிந்தியில் ரீமேக் நடிப்பதற்காக போன இவர் அங்கே செட்டில் ஆகிவிட்டார்.

பூஜா ஹெக்டே: இவர் தமிழில் முகமூடி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்பு தெலுங்கு, ஹிந்தி படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து பிஸியாகிவிட்டார். அங்கே டாப் நடிகையாக வலம் வந்த இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் மறுபடியும் ஹிந்தி,தெலுங்கு படங்களில் நடிக்கப் போய்விட்டார்.

Also read: அசின், அனுஷ்காவை செஞ்சு விட்ட ஹரி.. ரகசியத்தை போட்டு உடைத்த பிரியா பவானி சங்கர்

நிவேதா தாமஸ்: இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். தமிழில் போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம், தர்பார் போன்ற படங்களில் நடித்து பரிச்சயமானார். தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் கடைசியாக நடித்த தர்பார் படத்திற்கு பிறகு எந்த பட வாய்ப்புகளும் சரியாக அமையவில்லை.

அனுஷ்கா ஷெட்டி: தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. பின்பு முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தெலுங்கில் அதிகமான பட வாய்ப்புகள் வர ஆரம்பித்ததால் இவருடைய நாட்டம் அந்தப் பக்கம் சாய்ந்து விட்டது என்று சொல்லலாம். பின்பு தமிழில் படங்கள் நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளும் நடித்த பாகுபலி படம் மிகப்பிரமாண்டமாக வெற்றியடைந்தது. இந்த வெற்றிகளை கையில் வைத்துக் கொண்டாலும் இவருக்கு சொல்லும்படியான படங்கள் எதுவும் அமையாமல் இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ்: . சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வெற்றி படத்தை அதிகமாக கொடுத்திருக்கிறார். இவர் தமிழில் சர்க்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்பு பென்குயின் என்ற படத்தில் ஹீரோயின் சப்ஜெக்ட் கேரக்டரில் நடித்தார். இதைத்தொடர்ந்து முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென்று சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடித்தார். இதிலிருந்து இவருடைய மார்க்கெட் சரிய ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம்.

Also read: தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த கீர்த்தி சுரேஷ்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அம்மா

Trending News