பொதுவாக நடிப்பதற்கு வாய்ப்பு தேடி இயக்குனர்களிடம் கதைக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அஜித், இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவர் அறிமுகப்படுத்திய 6 இயக்குனர்களை பற்றியும், அது என்னென்ன படங்கள் என்றும் நாம் பார்க்கலாம்.
எஸ் ஜே சூர்யா: சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஒரு ஆசையுடன் வந்தவர் தான் எஸ்.ஜே சூர்யா. பிறகு சில பண பிரச்சனையே சமாளிப்பதற்காக பாக்கியராஜ் இடம் பயிற்சி பெற்று வந்தார். அடுத்து இயக்குனர் வசந்த் அவரிடம் ஆசை என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அப்பொழுது தான் இவருக்கும் அஜித்துக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பின் உல்லாசம் படத்தில் நடிக்கும் போது எஸ் ஜே சூர்யா அஜித்திடம் நான் ஒரு கதையை ரெடி பண்ணி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். பிறகு அஜித்திற்கு கதை ரொம்பவும் பிடித்துப் போனதால் சம்மதம் சொல்லிவிட்டார். அப்படி இவர் இயக்கத்தில் அஜித் நடித்த படம் தான் வாலி. இப்படம் 270 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வணிகரீதியாக வெற்றி பெற்றது.
Also read: அப்பா சென்டிமென்டில் கண்கலங்க வைத்த அஜித்தின் 5 படங்கள்.. தாரை தாரையாக கண்ணீர் வரச் செய்த விசுவாசம்
சரவண சுப்பையா: இவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் சிட்டிசன். இப்படம் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்தது. இவர் இயக்குனராக அறிமுகமாக இருந்திருந்தாலும் இவரின் கதை மேல் இருந்த நம்பிக்கையால் அதிகமாக ரிஸ்க் எடுத்து வித்தியாசமான கேரக்டரில் நடிக்க சம்மதித்திருக்கிறார். அவர் நம்பினது போல் படம் பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இதற்கடுத்து இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் ஏ பி சி டி. அடுத்ததாக பல படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்து வருகிறார்.
ஏ ஆர் முருகதாஸ்: இவர் ரட்சகன் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் எஸ்.ஜே. சூர்யாவுடன் குஷி படத்தில் பணியாற்றி இருக்கிறார். பின்பு இவர் இயக்குனராக அறிமுகம் ஆகி இயக்கிய முதல் படம் தான் தீனா. இதில் அஜித், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும் ஏ ஆர் முருகதாஸ் வெற்றி இயக்குனராக பெரிய திருப்புமுறையை ஏற்படுத்தியது.
Also read: அஜித்தின் சினிமா வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்ட 6 படங்கள்.. நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை காட்டிய வாலி
சரண்: இவர் இயக்கிய முதல் படம் காதல் மன்னன். இப்படத்தில் அஜித், மானு, எம் எஸ் விஸ்வநாதன், விவேக் ஆகியோர் நடித்திருப்பார்கள். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே அதிக அளவில் வெற்றி கொடுத்து அஜித்திற்கும், இவருக்கும் சினிமாக்கு கேரியரில் உயரத்தை கொடுத்தது. இந்த படத்திற்குப் பிறகு அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், அல்லி அர்ஜுனா ஜெமினி, அசல் போன்ற படங்களை தொடர்ந்து இயக்கி வந்தார்.
சிங்கம் புலி: இவர் இயக்குனர் சுந்தர் சி அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து உன்னை தேடி என்ற படத்தில் அஜித்துடன் அறிமுகம் ஆகியிருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் ஒரு கதையை ரெடி பண்ணி அஜித்திடம் கூறுகிறார். அவருக்கும் இந்த கதை பிடித்ததால் இவருக்காக நடிக்க சம்மதித்தார். அப்படி இவர் இயக்கி அஜித் நடித்து வெளிவந்த படம் தான் ரெட். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாமல் சராசரியாக லாபத்தை பார்த்தது. இதன் பிறகு 2005 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகாவை வைத்து மாயாவி என்ற படத்தை இயக்கினார். அந்தப் படமும் இவருக்கு பெரிய லாபத்தை கொடுக்கவில்லை. அதனால் இயக்குவதில் இருந்து விலகி இப்பொழுது சில படங்களில் காமெடி நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.
சுஷ்மா அஹுஜா: இவர் ஹிந்தி படங்களில் இயக்கி வந்த நிலையில் தமிழில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஒரு ஆசையுடன் கதையே ரெடி பண்ணி இருக்கிறார். பிறகு அந்த கதைக்கான பொருத்தமான ஹீரோ என்றால் அஜித் தான் என்று அவரிடம் கதையை கூறியிருக்கிறார். அவருக்கும் இந்த கதை பிடித்துக் போன பிறகு இதில் நடிக்க சம்மதித்துள்ளார். அப்படி இவர்கள் கூட்டணியில் வந்த படம் தான் உயிரோடு உயிராக. அத்துடன் இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை இவருடைய மகள் ரிச்சா அஹுஜா. இவர் தமிழில் நடித்த முதல் படம். பின்பு இவர் டும் டும் டும் படத்தில் ஆஷா என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.
Also read: அஜித்தை வைத்து படம் பண்ணி ஒரு பிரயோஜனமும் இல்ல.. விஜய்காந்த்தினால் மட்டுமே இது சாத்தியமாச்சு