திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வெற்றி மிதப்பில் காணாமல் போன 6 இயக்குனர்கள்.. ஹிட் கொடுக்க முடியாமல் திணறும் சம்பவம்

தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்த சில இயக்குனர்கள் தற்போது ஒரு ஹிட் படம் கூட கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள். ஏனென்றால் தற்போது தமிழ் சினிமாவில் பல இளம் இயக்குனர்கள் படையெடுத்துள்ளனர். தற்போது உள்ள ட்ரெண்டுக்கு ஏற்றார்போல் அவர்களது படம் இருப்பதால் ரசிகர்கள் அந்தப் படங்களை விரும்பி பார்க்கின்றனர். அவ்வாறு வெற்றி மிதப்பில் காணாமல் போன 6 நடிகர்களை தற்போது பார்க்கலாம்.

எம் ராஜேஷ் : காமெடி கலந்த காதல் படங்களை கொடுத்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் இயக்குனர் எம் ராஜேஷ். இவர் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்த வந்தார். ஆனால் அதன் பின்பு ஒரு ஹிட் படம் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.

சுராஜ் : மூவேந்தர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சுராஜ் படிக்காதவன், மாப்பிள்ளை என வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அதன்பின்பு அவர் இயக்கிய அலெக்ஸ் பாண்டியன், சகலகலா வல்லவன் போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை. தற்போது வைகை புயல் வடிவேலுவை வைத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்கி வருகிறார்.

பாலா : இயக்குனர் பாலா சேது, நந்தா, பிதாமகன் போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார். ஆனால் ஆர்யாவை வைத்த பாலா இயக்கிய நான் கடவுள் படத்தை தொடர்ந்து ஒரு வெற்றிப் படத்தை கூட கொடுக்க முடியாமல் திண்டாடி வருகிறார். தற்போது சூர்யாவை வைத்து வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஏஎல் விஜய் : கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் ஏ எல் விஜய். சமீபகாலமாக அவரது படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த வில்லை. எப்படியாவது மீண்டும் ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என ஏஎல் விஜய் போராடி வருகிறார்.

எம் சரவணன் : தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களை இயக்கியவர் எம் சரவணன். எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கியுள்ளார். ஆனால் அதன் பிறகு சரவணன் இயக்கத்தில் வெளியான படங்கள் வெற்றி பெறவில்லை.

Trending News