பாலிவுட்டின் சிறந்த நடிகரான சுஷாந்த் சிங் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங் நிஜவாழ்வில் பாரபட்சம் பார்க்காமல் அனைவரிடமும் நன்கு பழகக் கூடியவர். எந்த ஒரு இடத்திலுமே தான் ஒரு நடிகன் என்பதை காட்டிக் கொள்ளாமல் சராசரி மனிதனாக நடந்து கொள்வார்.
ஆனால் சில பாலிவுட் பிரபலங்கள் யாரையும் மதிக்காமல் நடந்து கொள்வார்கள். இந்நிலையில் ஒருமுறை ஒரு பெண் உங்களிடம் போட்டோ எடுக்க வேண்டும் என சுஷாந்த் இடம் கூறி உள்ளார். அதற்கு சற்றும் தலைக்கனம் இல்லாமல் காரில் இருந்து இறங்கிய அந்த ஏழை மனிதர்களிடம் சுஷாந்த் சிங் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதை மற்ற பாலிவுட் பிரபலங்கள் செய்வார்களா என்பது சந்தேகம்தான். அதேபோல் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சுஷாந்த் சிங் வளர்ச்சியை தடுக்க பல பாலிவுட் நடிகர்கள் சதி செய்துள்ளனர். சுஷாந்த் சிங் தேர்வான ஆறு படங்களில் அவரை நடிக்க விடாமல் வேறு நடிகர்களை நடிக்க வைத்துள்ளனர்.
முதலாவதாக 2013 இல் வெளியான ஆஷிகி2 படத்தில் சுஷாந்த் சிங் நடிப்பதாக இருந்தது. பின்னர் சில சூழ்ச்சியால் இப்படத்தில் சுஷாந்த் சிங் இக்கு பதிலாக ஆதித்யா ராய் கபூர் நடித்து இருந்தார். அதேபோல் பாஜிராவ் மஸ்தானி என்ற படத்திலும் முதல் தேர்வு சுஷாந்த் சிங் தான். இதைத்தொடர்ந்து ஃபிதூர், பெஃபிக்ரே, ஹாஃப் கேள் ஃபிரண்ட், ரோமியோ அக்பர் வால்டர் போன்ற படங்களில் சுஷாந்த் சிங்கை நடிக்க விடாமல் தடுத்துள்ளனர்.
இதில் பல உள்நோக்கம் இருக்கிறது, யாரையும் வளர விடக்கூடாது என்பதற்காகவே பாலிவுட் நடிகர்கள் பலரும் இந்த மாதிரி செயலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சொல்லப் போனால் பாலிவுட் நடிகர்கள் பலரும் அவர்களது குடும்பங்கள் மற்றும் சொந்த உறவினர்கள் மட்டுமே வளர விடுவார்கள், மற்ற யாரையும் வரமாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
அரசியலில் தான் நிப்போட்டிசம் இருக்கிறது என்றால் சினிமாவிலும் தற்போது வாரிசு நடிகர்களை மட்டுமே வளரவிடுகிறார்கள். திறமை இருந்தும் சுஷாந்த் சிங் போன்ற பல இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் தற்போது வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.