வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மண் வாசனையுடன் சினிமாவிற்கு பெருமை சேர்த்த பாரதிராஜாவின் 6 படங்கள்.. 200 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றி படம்

தமிழ் சினிமாவில் சிகரம் தொட்ட இயக்குனர்களில் பாரதிராஜாவிற்கு முதல் இடம் உண்டு. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் படங்கள் பொதுவாகவே மண் வாசனையுடன் நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை அழகாக கண்முன்னே காட்டியிருப்பார். அப்படி இவர் சினிமாவிற்கு பெருமை சேர்த்த ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.

16 வயதினிலே: 1977ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படத்தின் மூலம் தான் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், கவுண்டமணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இது 16 வயது பள்ளி மாணவியான ஸ்ரீதேவி எதிர்கொள்ளும் பாதிப்புகளை சமாளிக்கும் சவால்களாக இத்திரைப்படம் அமைந்திருக்கும். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. மேலும் 175 நாட்கள் திரையரங்களில் ஓடி வணிகரீதியாக வெற்றி பெற்றது.

கிழக்கே போகும் ரயில்: 1978 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சுதாகர் மற்றும் ராதிகா நடித்தார்கள். இதில் இவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து அதனால் வரக்கூடிய பிரச்சனையே எதிர்கொண்டு அவர்கள் காதலில் ஒன்று சேர்வதை அழகாக வெளிக்காட்டிருப்பார். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. மேலும் 365 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

Also read: என் முதல் படத்தைப் பார்த்துட்டு பாரதிராஜா கூறிய விமர்சனம்.. பாட்ஷா பட இயக்குனர் பகிர்ந்து சுவாரஸ்யம்

அலைகள் ஓய்வதில்லை: பாரதிராஜா இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் மூலம் தான் கார்த்திக் மற்றும் ராதா அறிமுகமாகி நடித்தார்கள். இதில் கார்த்திக் விச்சு என்ற கதாபாத்திரத்தில் ஒரு பிராமணப் பையனாகவும், ராதா மேரி என்ற கதாபாத்திரத்தில் கிறிஸ்துவ பெண்ணாகவும், இவர்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பார்கள். இதனால் இவர்களுக்கு ஏற்படும் தடைகளை தாண்டி எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை கதையின் மையக்கருத்தாக அமைக்கப்பட்டு இருக்கும். இதை மணிவண்ணன் கதையிலிருந்து பாரதிராஜா எழுதி இயக்கியிருப்பார். இப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது மற்றும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக ஆனது.

முதல் மரியாதை: பாரதிராஜா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு முதல் மரியாதை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இது மகிழ்ச்சியற்ற திருமணமான கிராமத் தலைவரும் மற்றும் ஒரு இளம் படகு பெண்ணுக்கும் இடையிலான உறவை சுற்றி எடுக்கப்பட்டிருக்கும். இத்திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டுகளை பெற்றது. மேலும் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கண்டது.

Also read: பொன்னியின் செல்வன் பார்த்து பாரதிராஜாவுக்கு வந்த ஆசை.. களத்தில் இறங்கிய சம்பவம்

கிழக்கு சீமையிலே: பாரதிராஜா இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு கிழக்கு சீமையிலே திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜயகுமார், நெப்போலியன், ராதிகா, விக்னேஷ் மற்றும் பலர் நடித்தார்கள். இத்திரைப்படம் அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையேயான உணர்வுபூர்வமான கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். மேலும் இதில் ஏற்படும் உணர்வை பார்ப்பவர்களுக்கு நெகிழும் வகையில் இருக்கும். இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ஹிட் ஆனது.

கருத்தம்மா: பாரதிராஜா இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு கருத்தம்மா திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ராஜா, ராஜஸ்ரீ, மகேஸ்வரி, சரண்யா, வடிவுக்கரசி மற்றும் பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் கதையானது அந்த காலத்தில் கிராமங்களில் பெண் சிசுக்கொலை இருந்ததால் அதை தடுக்கும் முயற்சியில் ஒரு விழிப்புணர்வு படமாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இது வணிக ரீதியாக வெற்றி பெற்று மற்றும் பிளாக் பஸ்டர் படமாக ஆனது.

Also read: ‘மீண்டும் படத்தை இயக்கி விட்டு தான் நான் சினிமாவை விட்டு செல்வேன்’ உறுதியாக இருக்கும் பாரதிராஜா.. கைகோர்த்த வாரிசுகள்!

Trending News