Vikram : விக்ரம் இன்று தனது 58 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சினிமாவில் பெரிய பின்புலம் இல்லாமல் தன்னுடைய திறமையால் முன்னேறியவர் தான் விக்ரம். அதுவும் சிவாஜி, கமல் போன்ற நடிகர்களுக்கு அடுத்தபடியாக உசுர கொடுத்து உடம்பை வருத்தி நடிக்க கூடியவர் விக்ரம்.
தங்கலான்
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ளது தங்கலான் படம். இன்று விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தது. இப்படத்தில் காட்டுவாசி போல் அடையாளம் தெரியாத அளவுக்கு விக்ரமின் தோற்றம் அமைந்திருந்தது.
ஐ
அந்நியன் படத்திற்கு பிறகு ஷங்கர் கூட்டணியில் விக்ரம் நடித்த படம் தான் ஐ. இந்தப் படத்தில் பாடி பில்டராக இருந்த விக்ரம் தவறான மருந்தால் உடம்பே அகோரமாக மாறும் அளவுக்கு தோற்றத்தை காண்பித்திருந்தார். இது ரசிகர்களுக்கு வியப்பை ஆழ்த்தி இருந்தது.
தெய்வத்திருமகள்
ஏஎல் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் தான் தெய்வத்திருமகள். இந்தப் படத்தில் மனநலம் குன்றியவராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார்.
அந்நியன்
விக்ரம் ஷங்கருடன் முதல் முறையாக கூட்டணி போட்டு மாபெரும் வெற்றி கண்ட படம் தான் அந்நியன். அம்பி, ரெமோ, அந்நியன் என மூன்று வித்தியாசமான நடிப்பை காட்டி மிரள செய்திருந்தார் விக்ரம்.
பிதாமகன்
பாலா இயக்கத்தில் விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான படம் தான் பிதாமகன். இந்தப் படத்தில் பிணங்களை எரிப்பவராக விக்ரம் நடித்திருந்தார். ஐ படத்தில் அவருடைய அசாத்தியமான நடிப்புக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
சேது
விக்ரமுக்கு சீயான் என்ற அடையாளத்தை ஏற்படுத்தியது சேது படம் தான். பாலா இயக்கத்தில் உருவான சேது படம் விக்ரமின் கேரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது. முதல் பாதையில் ஹண்ட்ஸம் ஹீரோவாக வலம் வந்த விக்ரம் இரண்டாம் பாதையில் மொட்டை அடித்து மனவளர்ச்சி குன்றியவர் போல் நடித்திருந்தார்.