வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நிஜ அப்பா, மகன் கூட்டணியில் வெளியான 6 படங்கள்.. பொன்னியின் செல்வனில் கலக்கிய ரத்த சொந்தம்

Real Father And Son Acting Same Movie: பொதுவாக அரசியல் மற்றும் சினிமாவில் வாரிசுகள் வருவது சாதாரணம் தான். அப்படி சினிமாவிலும் நிறைய வாரிசு நடிகர்கள் உள்ளனர். ஆனாலும் திறமை இருந்தால் மட்டுமே அவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள். இந்த சூழலில் நிஜ வாழ்க்கையில் அப்பா, மகனாக இருக்கும் பிரபலங்கள் படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சத்யராஜ், சிபிராஜ் : அப்பா, மகன் இருவரும் உருவத்திலும் ஒரே மாதிரியாக இருக்கக்கூடியவர்கள். இவர்கள் இருவரும் பல படங்களை ஒன்றாக நடித்துள்ளனர். அந்த வகையில் வெற்றிவேல் சக்திவேல், மண்ணின் மைந்தன், ஜோர், கோவை பிரதர்ஸ் ஆகிய படங்கள் அடங்கும். மேலும் இவர்கள் கூட்டணியில் வெளியான ஜாக்சன் துரை திரைப்படத்தின் தொடர்ச்சி வர இருக்கிறது.

Also Read : சினிமாவில் ஈகோ பார்க்காத ஒரே நடிகர்.. சத்யராஜ் உடன் பட்டையை கிளப்பிய காம்போ

அருண் விஜய், விஜயகுமார் : டாப் ஹீரோக்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விஜயகுமார் தனது மகனை கதாநாயகனாக சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் விஜயகுமார், அருண் விஜய் மற்றும் அவரது மகன் அர்ணவ் என மூன்று தலைமுறை இணைந்து ஓ மை டாக் படத்தில் நடித்திருந்தனர்.

விக்ரம், துருவ் விக்ரம் : சீயான் விக்ரம் முன்னணி நடிகர்களின் பட்டியலில் தற்போதும் இருந்து வருகிறார். இந்த சூழலில் அவரது மகன் துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவருமே இணைந்து மகான் படத்தில் நடித்திருந்தனர்.

Also Read : கவின் வெற்றிபெற்ற இயக்குனரை லாக் செய்த துருவ்.. விக்ரம் போடும் வசூல் கணக்கு பலிக்குமா

ஜெயம் ரவி, ஆரவ் ரவி : ஜெயம் ரவி வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அந்த வகையில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த கதையாக எடுக்கப்பட்டிருந்த டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருடைய மகன் ஆரவ் ரவியும் நடித்திருந்தார்.

கார்த்திக், கௌதம் கார்த்திக் : நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் அப்பா, மகன் இருவரும் ஜோடி போட்டு மிஸ்டர் சந்திரமௌலி என்ற படத்தில் நடித்திருந்தனர். மீண்டும் இவர்கள் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

பிரபு, விக்ரம் பிரபு : ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு இணையான ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் பிரபு. இவருடைய மகன் விக்ரம் பிரபு இப்போது கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். பிரபு மற்றும் விக்ரம் பிரபு இருவரும் ஒன்றாக இணைந்து பொன்னியின் செல்வன் படத்தில் கலக்கி இருந்தனர்.

Also Read : இணையத்தில் காட்டு தீயாய் பரவும் உண்மையான தங்கலான் புகைப்படம்.. ஒரே ஒரு வெற்றிக்காக துடிக்கும் விக்ரம்

Trending News