புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஒரே ஹிட் படத்தோடு சோலி முடிந்த 6 ஹீரோக்கள்.. எழுந்திருக்க முடியாத விக்ராந்த்

பொதுவாகவே சில பேர் சினிமாவிற்குள் எப்படி நுழைந்து தன்னை நிரூபிக்க வேண்டும் என்று தெரியாமல் இருந்து வருகிறார்கள். ஆனால் சில நடிகர்களுக்கு அப்படி வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்த முடியாமல் இருக்கிறார்கள். அப்படி நடித்த சில படங்கள் வெற்றி படங்களாக அமைந்தாலும் தொடர்ந்து அவர்களால் நிலைத்து நிற்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.

ஷியாம்: இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த முதல் படமான 12B மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே போன்ற படங்களில் நடித்து ஒரு ஹீரோவாக பிரபலமானார். ஆனால் இவரால் கிடைத்த வாய்ப்பை சரியாக தக்க வைத்துக் கொள்ள முடியாமல் அடுத்தடுத்த படங்களில் தோல்வியை மட்டுமே பார்த்து வந்தார். பின்பு இவர் தொடர்ந்து படங்களில் நடித்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு இவரால் வளர முடியாமல் போய்விட்டது. அதனால் இப்பொழுது சப்போட்டிங் கேரக்டர் அல்லது துணை கதாபாத்திரமாக நடித்து வருகிறார்.

Also read: நல்ல அழகு இருந்தும் ஜொலிக்க முடியாமல் போன 5 நடிகர்கள்.. காசு வேண்டாம் வாய்ப்பு தாங்க என கதறிய ஷ்யாம்

பரத்: இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்திருக்கிறார். பின்பு தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து செல்லமே, காதல், பிப்ரவரி 14, பட்டியல், எம் மகன் போன்ற படங்களில் நடித்து ஒரு பிரபல நடிகர் என்று முன்னணியில் வந்தார். அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியாமல் அதிகமான படங்களில் தோல்வியை மட்டுமே சந்தித்து இருக்கிறார். தற்போது இவர் கையில் மூன்று படங்கள் வைத்திருந்தாலும் அந்த படங்கள் சில காரணங்களால் தாமதமாக இருந்து வருகிறது.

கௌதம் கார்த்திக்: இவருக்கு பின்னணியில் இவரது அப்பா நவரச நாயகன் கார்த்திக் இருந்ததால் சினிமாவிற்குள் நுழைந்த முதல் படமே மணிரத்தினம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் இவர் நடிப்பில் வெளிவந்தது. இவர் நடித்த இந்த படம் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. ஆனால் அதன்பின் இவர் நடித்த என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், யுத்த சத்தம், தேவராட்டம் போன்ற படங்கள் இவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இதனை அடுத்து இப்பொழுது இவர் சிம்பு நடிப்பில் வெளிவர இருக்கும் பத்துதல படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இவருக்கு சினிமா கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்ப்பில் இருக்கிறார்.

Also read: கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் இணைந்து நடிக்கும் தேவராட்டம் திரைப்படத்தின் புகைப்படங்கள்!.

ஸ்ரீகாந்த் : இவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் ஒரு சாக்லேட் பாயாக அறிமுகமானார். பின்பு ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, கனா கண்டேன், பூ போன்ற படங்களில் நடித்து மிகவும் ரசிகர்களை கவர்ந்தார். இதனை தொடர்ந்து ஒரு முன்னணி நடிகராக வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் சில தோல்வி படங்களால் இவரது சினிமா கேரியரை தொலைத்து விட்டார் என்றே சொல்லலாம். தற்போது இவர் கையில் இருக்கும் இரண்டு படங்களால் மறுபடியும் விட்ட இடத்தை பிடிக்கலாம் என்று நடித்து வருகிறார்.

ஜீவா : இவர் தமிழில் ஆசை ஆசையாய் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு தித்திக்குதே, ராம், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, ரௌத்திரம், நண்பன் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். ஆனாலும் இவரால் இப்பொழுது வெற்றி படத்தை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். சமீபத்தில் நடித்த படங்களும் இவருக்கு எதிர்பார்த்த அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. தற்போது இவர் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

விக்ராந்த்: இவர் சினிமாவில் அழகன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். பின்பு கற்க கசடற என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு அடுத்து கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, தொண்டன், வெண்ணிலா கபடிகுழு போன்ற படங்களில் நடித்து நன்றாக பரீட்சியமானார். அத்துடன் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில் ஆட்ட நாயகனாக பங்கேற்றுகிறார். ஆனாலும் நடித்த இரண்டு, மூன்று படங்களில் மட்டும் வெற்றியை பார்த்த இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் போய்விட்டது.

Also read: நடிகர் விக்ராந்த் மனைவியும் பெரிய பிரபலம் தானுங்க!

Trending News