வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

மேடையில் கைதட்டலை வாங்கிய தளபதியின் டக்கரான 6 குட்டி ஸ்டோரி.. லியோவிற்காக காத்திருக்கும் திரையுலகம்

Vijay Kutty Story:விஜய்யின் ஆடியோ லான்ச் விழாவுக்கு எப்போதுமே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஏனென்றால் அதில் அவர் சொல்லும் குட்டி ஸ்டோரி என்று ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடும் விஜய் தெறி முதல் வாரிசு படங்கள் வரை சொன்ன குட்டி ஸ்டோரி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

வாரிசு : விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வாரிசு. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி, 90களில் தனக்கு போட்டியாக ஒருவர் இருந்தார், அவர் எப்போதுமே என்னை பின்தொடர்ந்து வந்தார், அவரை முந்த வேண்டும் என நான் வேகமாக ஓடினேன் என்றும், அதேபோல் நாம் வாழ்க்கையில் எப்போதுமே முன்னேற ஒருவர் வேண்டும் என்று கூறினார். கடைசியாக தனக்கு போட்டியாக இருந்தவர் ஜோசப் விஜய் என்று தளபதி கூறினார். அதாவது ஒருவர் தன்னைத்தானே போட்டியாளராக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இதன் மூலம் கூறியிருந்தார்.

Also Read : 40 வருடங்களாக விஜய்யின் இமேஜை கெடுத்து அசிங்கப்படுத்திய சம்பவங்கள்.. அரசியல் முடிவுக்கு காரணம் இதுதான்

மாஸ்டர் : லோகேஷ், விஜய் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் மாஸ்டர். இந்த படத்தின் விழாவில் விஜய் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது பலர் பூத்தூவி வரவேற்பார்கள். சிலர் கற்களும் எரிவதுண்டு. ஆனால் தன்னுடைய வேலை எதுவோ அதை நினைத்து தன் வழியில் சென்று கொண்டிருக்கும். அதேபோல் எத்தனை இடையூறுகள் வந்தாலும் தன்னுடைய வழியில் சென்று கொண்டே இருக்க வேண்டும் என தளபதி கூறியிருந்தார்.

பிகில் : அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தின் ஆடியோ லான்ச்சில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி. அதாவது பூக்கடையில் வேலை செய்யும் ஒரு பையனின் வேலை திடீரென போய் விடுகிறது. அதன் பிறகு தெரிந்தவர்கள் மூலம் பட்டாசு கடையில் விலைக்கு செல்கிறான். ஆனால் ஒரு பட்டாசுகள் கூட விற்கவில்லை என்று பார்த்தால் அப்போது அந்தப் பையன் பூக்கள் மேல் தண்ணீர் தெளிப்பது போல பட்டாசு மேல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் தெளித்துள்ளான். இது இதற்கு குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை. யாருக்கு எந்த திறமை இருக்கிறதோ அவர்களுக்கு அந்த வேலையை கொடுக்க வேண்டும் என விஜய் அழகாக கூறியிருந்தார்.

Also Read : விஜய்யின் உடன்பிறப்பாக நடித்த 5 நடிகர்கள்.. அண்ணன், தம்பியாக நடித்து தளபதிக்கு வில்லனான பிரபலங்கள்

சர்கார் : விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய படம் சர்கார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மன்னர் வேறு ஊருக்கு தனது பரிவாரத்துடன் செல்கிறார். அப்போது தனக்கு எலுமிச்சை ஜூஸ் வேண்டும் என்று கேட்கிறார். அப்போது உப்பு இல்லை என்பதால் பக்கத்து கடையில் இருந்து வாங்க செல்கிறார். அப்போது மன்னர் காசு கொடுத்து வாங்கும் படி கூறுகிறார். இது உப்பில் என்ன வரப்போகிறது என்று நினைத்தாலும், இன்று மன்னர் செய்தது போல் நாளை வருபவர்கள் மொத்தத்தையும் கொள்ளையடிக்க வாய்ப்பிருக்கிறது என்று விஜய் கூறியிருந்தார்.

மெர்சல் : விஜய் மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கைதட்டும்படியான ஒரு குட்டி ஸ்டோரி சொல்லியிருந்தார். ஏதாவது ஒரு மருத்துவர் தனது காரை சரி செய்ய மெக்கானிக் ஷாப்புக்கு எடுத்து சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் உள்ள மெக்கானிக், உங்களைப் போலவே நானும் அடைப்புகளில் சரி செய்கிறேன், வால்வுகளை மாற்றுகிறேன் ஆனால் உங்களுக்கு கிடைக்கும் பணம், புகழ் எனக்கு கிடைக்கவில்லையே ஏன் என்று கேட்டார். இதற்கு மருத்துவர் இதையெல்லாம் வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது உன்னால் செய்ய முடியுமா என அழகாக பதில் கூறியிருந்தார்.

தெறி : விஜய் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கர்வம் பற்றி பேசி இருந்தார். அதாவது சீன அதிபர் ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது சின்ன பையன் ஒருவர் தலைவர்களின் புகைப்படத்தை விட்டுக் கொண்டிருந்தார். அனைத்துமே அவருடைய புகைப்படமாகவே இருந்துள்ளது. அதற்கு அந்த சின்ன பையனை அழைத்து என்ன தான் என் மீது எவ்வளவு மரியாதை இருந்தாலும் இன்று தலைவர்களின் புகைப்படத்தையும் இருக்க வேண்டும் என்ற அறிவுரை கூறியிருக்கிறார். அந்த சின்ன பையன் புகைப்படங்களும் விற்று விட்டது, இது மட்டும்தான் வைக்காமல் இருக்கிறது என்று கூறினானாம்.

Also Read : விஜய்யுடன் ஜோடி போட்டு மறக்க முடியாத 7 நடிகைகள்.. ஒரு கிஸ் சீன் கூட இல்லாமல் காதலில் உருக வைத்த ஷாலினி

- Advertisement -

Trending News