திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மொக்கை வாங்கி, டெபாசிட் இழந்த ஆறு பார்ட் 2 படங்கள்.. பார்க்கவே முடியாமல் தலைவலி ஏற்படுத்திய கமல்

6 Part-2 Movies: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட ஜாம்பவான் தான் கமல். இந்நிலையில் இவரின் படம் ஒன்று பார்ட் 2வாக எடுக்கப்பட்டு படும் தோல்வியை சந்தித்த தன் குறித்த தகவலை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

மணல் கயிறு-2: 1982 ஆம் ஆண்டு காமெடி நிறைந்த இப்படத்தில் எஸ் பி சேகர், விசு, மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இருப்பினும் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெறாத இப்படத்தின் பார்ட் 2 2016ல் எடுக்கப்பட்டு நெகட்டிவ் விமர்சனங்களோடு பாக்ஸ் ஆபிஸில் படும் தோல்வியை சந்தித்தது.

Also Read:  லிப் லாக், டேட்டிங் என மன்மதனாகவே வாழ்ந்த நடிகர்.. வரிசையாக காதலிகள் கழட்டி விட இதுதான் காரணம் 

குரோதம் 2: 1982ல் ஜெகநாதன் இயக்கத்தில் திரில்லர் படமாய் வெளிவந்த இப்படத்தில் பிரேம் மேனன், ராணி பத்மினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். இப்படம் சராசரியான விமர்சனங்களை பெற்ற நிலையில், 2000ல் பிரேம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் பார்ட் 2வில் குஷ்பூ, நாசர், மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இருப்பினும் போதிய விமர்சனங்களை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் கல்யாணராமன் 2: மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்று கமல் நடித்த படம் தான் ஜப்பானின் கல்யாணராமன். பல்லு எடுப்பான தோற்றம் கொண்ட கமலின் நடிப்பு பெரிதாக பார்க்கப்பட்டாலும், மக்களிடையே போதிய விமர்சனங்களை பெறாமல் இரண்டு பாகங்களும் படும் தோல்வியை சந்தித்தது.

Also Read:  அதிரடியான ட்விஸ்ட் வைத்த லியோ லோகேஷ்.. தள்ளிப்போகும் தளபதி-68, பதட்டத்தில் வெங்கட் பிரபு

திருட்டுப் பயலே 2: 2006ல் வெளிவந்த நகைச்சுவை திரில்லர் படமான திருட்டுப் பயலே படத்தில் மாளவிகா, அப்பாஸ், சோனியா அகர்வால், ஜீவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். ஹிந்தி படத்தின் ரீமேக்கான இப்படம் தமிழில் வெற்றியை கண்டது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் பாகம் இரண்டு எடுக்கப்பட்டு, பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலாபால் நடிப்பில் வெளிவந்து படும் தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜித்தன் 2: 2005ல் சௌத்ரி மகனான ரமேஷ் நடிப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் பாகம் 2 2016ல் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் ஹாரர் காமெடி படமாய் வெளிவந்து போதிய விமர்சனங்களை பெறாமல் மொக்கை வாங்கியது.

Also Read:  யுவன் சங்கர் ராஜாவை குஷிபடுத்திய தளபதி.. சுயநலத்திற்காக யாரும் செய்யாததை செய்த விஜய்

Trending News