வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

Vignesh Sivan: நயன்தாரா இல்லாத குறையை தீர்த்து வைக்கும் SJ சூர்யா.. இரவு ஆச்சுன்னா சின்ராசு போல் பறக்கும் விக்னேஷ் சிவன்

Vignesh Sivan: நயன்தாரா அளவுக்கு இல்லனாலும் விக்னேஷ் சிவன் ஏதோ ஒன்னு ரெண்டு படங்களை இயக்கியதன் மூலம் பரிச்சயம் ஆகிவிட்டார். அதன்பின் நயன்தாராவின் புகழை வைத்து பிரபலமாக இருக்கிறார். அதனால் மனைவி சொல்லை மந்திரம் என்று தாரகத்தை மந்திரமாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில் நயன்தாராவை எந்த விதத்திலும் தொந்தரவு பண்ணக்கூடாது என்று அவருடைய இஷ்டத்துக்கு விட்டுவிட்டார். ஆனால் திருமணத்திற்கு பின் நயன்தாராவுக்கு இங்கே வெற்றி என்பது குதிரைக்கொம்பாக போய்விட்டது. அதனால் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி நடிப்பதற்காக போய்விட்டார்.

இதனால் விக்னேஷ் சிவன் இங்கே தனி மரமாக இருந்திருக்கிறார். அத்துடன் LIC படப்பிடிப்பு போய்க் கொண்டிருப்பதால் அதில் கவனத்தை செலுத்தி வருகிறார். முக்கியமாக இப்படத்தில் எஸ்ஜே சூர்யா கமிட் ஆகி நடிக்கிறார். அந்த வகையில் இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நட்பு ரீதியாக நெருக்கம் ஏற்பட்டு விட்டது.

நயன்தாராவை மறக்கடிக்க செய்த எஸ்ஜே சூர்யா

அதனால் இரவு ஏழு மணி ஆகிவிட்டாலே விக்னேஷ் சிவன் எங்க இருந்தாலும் எஸ்ஜே சூர்யா வீட்டிற்கு பறந்து போய்விடுகிறார். அதாவது ஏற்கனவே எஸ்ஜே சூர்யா இயக்குனராக சில வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

விக்னேஷ் சிவன் சில ஏமாற்றத்துக்கு பின் LIC படத்தை மட்டுமே நம்பி இறங்கி இருக்கிறார். அதனால் இப்படத்தை எப்படியாவது வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று எஸ்ஜே சூர்யா வீட்டிற்கு சென்று விடிய விடிய படத்திற்கான டிஸ்கஷன் செய்து வருகிறார். அந்த வகையில் இவர்களுடைய கூட்டணியில் படத்தின் கதை ரொம்பவே சூப்பராக ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த காரணத்தினால் விக்னேஷ் சிவன் வேறு எதைப் பற்றியும் கண்டுக்காமல் முழுமூச்சாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார். அதனால் நயன்தாரா இல்லை என்றாலும் அது பற்றி கவலை இல்லாமல் எஸ்ஜே சூர்யாவுடன் நட்பு ரீதியாக பழகி வருகிறார்.

ஆனால் விக்னேஷ் சிவனின் இந்த மாற்றம் நயன்தாராவுக்கு கொஞ்சம் பொறாமைப்படும் அளவிற்கு அமைந்திருக்கிறது. ஏனென்றால் நயன்தாராவை பொருத்தவரை தன்னுடைய கணவன் தனக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து தன் காலிலே சுற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்.

அப்படிப்பட்ட அவரே மறந்து போய் விக்னேஷ் சிவன், எஸ்ஜே சூர்யாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தால் ரொம்பவே கடுப்பில் சுற்றி வருகிறார்.

Trending News