வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அஜித் கிட்ட விட்டதை பிரதீப் கூட்டணியில் எடுக்கப் போகும் விக்கி.. SJ சூர்யா வெளியிட்ட பதிவு

LIC movie udate: இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு எந்த பட வாய்ப்பும் சரியாக அமையவில்லை. இதற்கு இடையே விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் கூட்டணி அமைக்க இருக்கும் படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து நடிகர் எஸ் ஜே சூர்யா இந்தப் படத்தில் இணைந்திருக்கும் நிலையில், படத்தைப் பற்றிய புதிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா கூட்டணியில் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்குப் பிறகு அவர் நடிகர் அஜித்குமாரின் படத்தை இயக்கப் போகிறார் என செய்திகள் வெளியானது. பட வேலைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்ட நிலையில், விக்னேஷ் சிவனை அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

Also Read:சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி… கொம்பு சீவி விட்டவராய் குத்தி கிழித்த பிரதிப் ரங்கநாதன்

தொடர்ந்து விக்னேஷ் சிவன் எந்த படத்திலும் புக் ஆகவில்லை என்பதால் இனி அவருடைய சினிமா கேரியர் அவ்வளவுதான் என பேசப்பட்டது. ஆனால் கடந்த வருடம் லவ் டுடே என்ற மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப்  உடன் இணைந்து தற்போது அவர் எல் ஐ சி படத்தில் இணைந்திருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யாவும் நடிக்க இருக்கிறார்.

எஸ் ஜே சூர்யாவின் டிவிட்டர் பதிவு

Sj Suryah
Sj Suryah

இதற்கிடையில் இந்த படத்தைப் பற்றி எஸ் ஜே சூர்யா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில் எல்ஐசி என்னும் பெயர் எப்படி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறதோ, அதைவிட சிறப்பாக இந்த படம் இருக்கப் போகிறது. நேற்று இந்த படத்திற்காக சுமார் 12 மணி நேரம் வொர்க் ஷாப் நடத்தப்பட்டது. விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் உடன் அதில் கலந்து கொண்டது சிறந்த அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

இந்த முறை சிறந்த படத்தை கொடுத்து விட வேண்டும் என்பதில் விக்னேஷ் சிவன் ரொம்பவும் உறுதியாக இருக்கிறார். இன்றைய நவீன காதலை, நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இந்த படத்தில் கொடுக்க இருக்கிறோம். எல் ஐ சி படத்தின் வேலைகள் ரொம்பவும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எஸ் ஜே சூர்யா பதிவிட்டு இருக்கிறார்.

Also Read:பிரதீப்புக்கு அடுக்கடுக்காக குவியும் வாய்ப்புகள்.. கையில் 3 படங்களை வைத்திருக்கும் ரொமான்டிக் ஹீரோ

Trending News