
Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த்திற்கு அவருடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய அடியை கொடுத்த படம் பாபா. இது குறித்து இயக்குனர் எஸ் ஜே சூர்யா அவருடைய பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதாவது பாபா தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்த படத்தை பற்றி யோசிக்கவே நான்கு வருடங்கள் எடுத்துக் கொண்டாராம்.
ரஜினி எடுத்த முடிவு
அதன் பின்னர் அவர் செலக்ட் செய்த படம் தான் சந்திரமுகி. இந்த படத்தை எடுத்துக் கொண்டால் இதில் ரஜினி நடித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.
ரஜினி கேரக்டரில் யார் நடித்திருந்தாலும் இந்த படம் ஓடி இருக்கும். படம் முழுக்க அதில் நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவர்களுடைய பர்பாமன்ஸை கொட்டி தீர்த்து இருப்பார்கள்.
ஆனால் ரஜினி சைலண்ட் மோடில் தான் இருப்பார். அவருடைய மொத்த நடிப்பு திறமையையும் படத்தின் கடைசி காட்சியில் வரும் வேட்டையன் கேரக்டரில் தான் காட்டியிருப்பார்.
பாபா படத்தின் தோல்விக்கு பிறகு தன்னுடைய ஹீரோயத்தை பற்றி யோசிக்காமல் அப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததால்தான் மீண்டும் அவரால் ஜெயிக்க முடிந்தது.
இதை செய்ய சூப்பர் ஸ்டாருக்கு ஒரு துணிச்சல் வேண்டும் என எஸ் ஜே சூர்யா.