திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நின்னுபோன படத்தை தூசி தட்டும் எஸ் ஜே சூர்யா.. ரஜினி நண்பருக்கு மீண்டும் விடுத்த அழைப்பு

Actor SJ Suryah: இயக்குனர் மற்றும் நடிகர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் பொம்மை திரைப்படம் இன்று திரையில் ரிலீஸாகி இருக்கிறது. இந்த படத்தில் அவர் நடித்ததோடு துணை தயாரிப்பாளராகவும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். ஒரு இயக்குனராக தன்னுடைய கலைப்பயணத்தை தொடங்கிய இவர் இன்று பன்முக திறமை கொண்ட நடிகராக பட்டையை கிளப்பி வருவது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.

பொம்மை படத்தின் ரிலீஸ் வேலைகள் முடிந்த கையோடு எஸ் ஜே சூர்யா கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு இயக்குனராக அவதாரம் எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இவருக்கு அடுத்தடுத்து மார்க் ஆண்டனி மற்றும் ஜிகர்தண்டா 2 போன்ற படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. தமிழ் சினிமாவில் தற்போது பயங்கர பிசியாக இருக்கும் நடிகர் என்றால் அது இவர்தான்.

Also Read:SJ சூர்யா போர் அடித்ததால் கருநாகத்துடன் இணையும் பிரியா பவானி.. சுட சுட வெளியான அப்டேட்

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு அப்படியே நிறுத்தப்பட்ட ஒரு படத்தை மீண்டும் தொடங்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம் எஸ் ஜே சூர்யா. இந்த படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய கனவு படம் என்று கூட சொல்கிறார்கள். அதற்கு காரணம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தான். உயர்ந்த மனிதன் என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில் அமிதாப் பச்சனை தமிழில் அறிமுகமாக்குவதோடு, அவரோடு நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆசைக்காகவும் பயங்கரமாக போராடி இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

கள்வனின் காதலி படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ்வாணனின் இயக்கத்தில் இந்த படம் இந்தி மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் எடுக்கப்படுவதாக இருந்தது. படத்திற்கான சூட்டிங் வேலைகள் கிட்டத்தட்ட ஒரு வாரம் நடந்திருக்கிறது. அமிதாப்பச்சனும் அதில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் தயாரிப்பு தரப்புக்கும், அமிதாப்புக்கும் இடையே நடந்த ஒரு சில கசப்பான சம்பவங்கள் காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.

Also Read:ப்ரியா பவானியைப் போல் நம்மளும் டாப்ல வந்துடலாம்.. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட 5 நடிகைகள்

அப்போது எஸ் ஜே சூர்யா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அமிதாப்பச்சனுக்கும், தயாரிப்பு தரப்புக்கும் இடையே பிரச்சனை உண்டானது உண்மைதான். என்னுடைய மான்ஸ்டர் பட வேலைகள் முடிந்த கையோடு, நான் மும்பை சென்று அவரை சமாதானப்படுத்தி கண்டிப்பாக இந்த படத்தின் வேலைகளை ஆரம்பிப்பேன் என்று அறிவித்திருந்தார். ஆனால் அதன் பின்னர் இந்த படத்திற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படாமல் அப்படியே கிடப்பில் கிடந்தது.

                                                 உயர்ந்த மனிதன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

 

Uyarntha manithan
Uyarntha manithan

தற்போது இந்த படத்தை மீண்டும் தூசி தட்ட திட்டமிட்டு விட்டார் இயக்குனர் எஸ் ஜே சூர்யா. அதற்கேற்றவாறு பொம்மை படத்தின் ரிலீஸுக்கு அமிதாப் பச்சனும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதை பார்க்கும் பொழுது கண்டிப்பாக இந்த படத்தின் வேலைகள் திரும்ப ஆரம்பிக்கப்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Also Read: சீரியலில் நடித்த பின்பு படிப்படியாக முன்னேறி சினிமாவிற்கு வந்த 5 ஆர்டிஸ்ட்கள்.. வெள்ளி திரையில் ஜொலிக்கும் கவின் பிரியா

Trending News