சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இந்தியன் 2 காலை வாரி விட்டால் என்ன.? SJ சூர்யா நடிப்புக்கு தீனி போடும் 9 படங்கள்

SJ Suryah: இயக்குனர் என்பதை காட்டிலும் நடிகனாக இப்போது எஸ். ஜே. சூர்யா பட்டையை கிளப்பி வருகிறார். அந்த வகையில் மாநாடு படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் வில்லனாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. ஆனாலும் இந்த படம் காலை வாரிவிட்டால் என்ன அவரின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் லைன் அப்பில் 9 படங்கள் இருக்கிறது.

தனுஷ் இயக்கி, நடிக்கும் ராயன் படத்தில் மாஸ் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்திருக்கிறார். இப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்தியன் 2 வில் எஸ் ஜே சூர்யா ஜொலிக்க முடியவில்லை என்றாலும் இந்தியன் 3 படத்தில் அவருக்கு வெயிட்டான காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

எஸ்ஜே சூர்யா கைவசம் உள்ள படங்கள்

மேலும் இந்தியன் 3 அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகிறது. சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் வீரதீர சூரன் படத்திலும் எஸ் ஜே சூர்யா முக்கிய வில்லனாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து எல்ஐசி மற்றும் சிவகார்த்திகேயனின் 24 வது படங்களும் எஸ்ஜே சூர்யா கைவசம் இருக்கிறது.

மேலும் தெலுங்கில் ஷங்கர் ராம்சரண் கூட்டணியில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்திலும் எஸ் ஜே சூர்யா தான் வில்லன். சரிபோதா ஷனிவாரம் என்ற மற்றொரு தெலுங்கு படத்திலும் எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார்.

மலையாளத்தில் விபின் தாஸ் மற்றும் பகத் பாசில் கூட்டணியில் உருவாகி வரும் படத்திலும் எஸ்ஜே சூர்யா மிரட்ட உள்ளார். இவ்வாறு தமிழில் மட்டும் அல்லாமல் மற்ற மொழிகளிலும் இயக்குனர்களின் விருப்பமான வில்லன் நடிகராக எஸ்ஜே சூர்யா இருந்து வருகிறார்.

வில்லனாக மிரட்டும் எஸ்ஜே சூர்யா

Trending News