செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

சிம்புவையும் தனுசையும் காலி பண்ணும் SK.. பெரிய இடத்து சகவாசம் சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பாட்

Sivakarthikeyan: குறுகிய காலத்தில் வளர்ந்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது அசைக்க முடியாத இடத்தில் ஒய்யாரத்திற்கு போய்விட்டார். ஆனால் இவருடைய வளர்ச்சி எல்லாம் இன்னும் கொஞ்ச காலங்களில் தான் என்று இவரைப் பற்றி பேசியவர்களின் வாயை அடைக்கும் அளவிற்கு தொடர் வெற்றியை கொடுத்து டாப் 10 நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்து விட்டார்.

இதனை அடுத்து தற்போது தனுசுக்கு இவர்தான் போட்டி என்பதற்கு ஏற்ப எதிரும் புதிருமாக பயணித்து வருகிறார்கள். தனுஷ் என்ன பார்முலாவை பயன்படுத்துகிறாரோ, அதையே எஸ்கேவும் ஃபாலோ பண்ண ஆரம்பித்து விட்டார். அதே மாதிரி சிவகார்த்திகேயன் என்னெல்லாம் செய்கிறார் என்ற நுணுக்கங்களை கமுக்கமாக இருந்து தனுஷும் நோட்டமிட்டு வருகிறார்.

இப்படி இவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு வந்த நிலையில் தற்போது சிம்புவையும் காலி பண்ணும் விதமாக எஸ்கே களத்தில் இறங்கி விட்டார். அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக் லைப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

பிளான் போட்டு காய் நகர்த்தும் எஸ்கே

ஏற்கனவே சிம்புக்கு சமீப காலமாக எந்த படங்களும் இல்லாததால் இந்த வாய்ப்பின் மூலம் தன்னை அடுத்த கட்ட லெவலுக்கு கொண்டு போகும் என்று சிம்பு பிளான் பண்ணி காய் நகர்த்தி வருகிறார். ஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் சிவகார்த்திகேயன் தற்போது ரஜினிக்கு வில்லனாக நடிப்பதற்கு தயாராகி விட்டார்.

அதாவது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகும் தலைவர் 171வது படத்தில் வில்லனாக நடிப்பதற்கு சிவகார்த்திகேயன் இடம் லோகேஷ் கேட்டிருக்கிறார். சும்மாவே எஸ்கே, ரஜினி படத்தில் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்.

அப்படிப்பட்டவருக்கு தற்போது தொக்காக ஒரு விஷயம் மாட்டி இருக்கிறது என்றால் அதை விட்டு வைப்பாரா என்ன. அதனால் லோகேஷ் கேட்டதும் உடனே சம்மதத்தை தெரிவித்து ரஜினியின் வில்லனாக மாறப் போகிறார். பொதுவாக பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் யார் வில்லனாக நடிக்கிறார்களோ, அவர்களுக்கும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துவிடும்.

அந்த வகையில் இந்த பார்முலாவை பயன்படுத்தி இன்னும் அடுத்த லெவலுக்கு தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று சிவகார்த்திகேயன் பிளான் பண்ணிவிட்டார். இப்படி தனுஷ், சிம்பு போன்ற நடிகர்கள் ஒவ்வொருவரையும் எஸ்கே காலி பண்ணி விட்டு வருகிறார். இதுல வேற விஜய் தற்போது அரசியல் களத்தில் இறங்கி விட்டதால் அவருடைய இடத்தையும் பிடிப்பதற்கு வாய்ப்பு இருக்கு என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இன்னும் என்னெல்லாம் செய்ய இருக்கிறாரோ, எப்படியாவது அவருடைய எண்ணம் ரஜினிக்கு அடுத்தப்படியான இடத்தை பிடித்து விட வேண்டும் என்றுதான். ஆனால் அதற்கு இவர் தகுதியானவரா, இவர் போட்ட பிளான் எல்லாம் ஒர்க்அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News