வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தூக்கத்தைத் தொலைத்த சூரி.. வீட்டை விட்டு கிளம்பினாலே பசங்க கூட அசிங்கப்படுத்தறாங்க என புலம்பல்

காமெடி நடிகராக கோலிவுட்டில் அறிமுகமான சூரி, தற்போது கதாநாயகனாக இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே தூக்கத்தை தொலைத்து சொந்த வீட்டிலேயே அசிங்கப்பட்டு கொண்டிருக்கிறார் சூரி.

அதாவது விஷ்ணு விஷால் மற்றும் சூரி காம்போவில் இதுவரை வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல ஹிட் படங்கள் வெளியானது. இதனால் இவர்களுக்கு இடையே நல்ல நட்பும் மலர்ந்திருந்ததால், நிலம் வாங்கி தருவதாக சொல்லி பண மோசடி செய்ததாக விஷ்ணு விஷாலின் தந்தை மீது சூரி புகார் அளித்திருந்தார்.

Also Read: சூரிக்கு பதிலாக நடிக்க இருந்த பிரபல காமெடி நடிகர்.. வெற்றி மாறனிடம் வேணாம் என மறுத்த பிரபலம்

பிறகு விஷ்ணு விஷால் தனது தந்தை மீது சூரி பொய்யான புகாரை கொடுத்துள்ளார் எனக் கூறிவந்தார். அதாவது சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக விஷ்ணு விஷாலின் தந்தை டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் 2.70 கோடி பண மோசடி செய்ததாக சூரி அடையார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஆனால் இந்த வழக்கை முறைப்படி அடையார் போலீஸார் விசாரிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரி வழக்கை தொடர்ந்து இருந்தார். இதனால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 மாதத்திற்குள் இந்த வழக்கை முடித்து வைக்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே மூன்று முறை ஆஜரான சோறு நேற்று 4வது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

Also Read: நஷ்டத்தில் ஹோட்டல் நடத்தும் சூரி.. அது தெரியாம விசாரணை நடத்திய அரசாங்கம்

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சூரி, ‘கனவில் கூட வேப்பேரி காவல் அலுவலகம் தான் வருகிறது. நிச்சயம் விசாரணைக்குப் பிறகு நியாயம் கிடைக்கும் என்றும் நம்புகிறேன்’ என தெரிவித்தார். முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஷூட்டிங்கா என்று கேட்டு நிலை மாறி, என்னப்பா போலீஸ் ஸ்டேஷனா! என குழந்தைகள் கேட்கின்ற நிலைமை வந்துவிட்டது. இதெல்லாம் என்ன பொழப்பு! என்று சலித்துக் கொண்டார்.

இதுபோன்ற சர்ச்சையில் சினிமா பிரபலங்கள் மாட்டிக் கொள்வது புதிதல்ல. அப்படி தான் சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவருக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் இந்த மோதல், போலீஸ் விசாரணையில் சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: புரோட்டா சூரியை பொறிவைத்து பிடித்த அதிகாரிகள்.. அப்படி என்ன தப்பு பண்ணிட்டாரு தெரியலையே.!

Trending News