படையே நடுங்கும் பாம்பு கடித்தால் என்ன செய்யணும், செய்யக்கூடாது.. உயிரைக் காப்பாற்றும் வழிமுறை

Snake : பாம்பு என்றால் படையே நடக்கும் என்ற பழமொழியை நாம் கேட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட பாம்பு கடித்தால் என்ன செய்யணும், செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம். பொதுவாக விஷமற்ற மற்றும் விஷப் பாம்புகள் இருக்கிறது.

ஒருவருக்கு பாம்பு கடித்தது என்றால் உடனடியாக ஓடக்கூடாது. ஏனென்றால் ஓட்டத்தில் இருக்கும்போது விஷம் உடம்பு முழுக்க பாய அதிக வாய்ப்பு உள்ளது. அடுத்ததாக சினிமாவில் காண்பிப்பது போல் பாம்பு கடித்த இடத்தை கிரி விடுவதோ, வாய் வைத்து ரத்தத்தை உறிஞ்சுவதோ கூடாது.

அதோடு பாம்பு கடித்த இடத்திற்கு மேலே இறுக்கமாக கயிறு அல்லது துணியை கட்டக் கூடாது. மோதிரம், கொலுசு போன்றவை அணிந்திருந்தால் கழட்ட வேண்டும். அந்த நேரத்தில் தண்ணீர் மற்றும் சாப்பாடு ஆகியவை எடுத்துக் கொள்ளக் கூடாது.

பாம்பு கடித்தால் செய்யக்கூடாது மற்றும் செய்யக்கூடியவை

முடிந்தவரை பதட்டப்படாமல் இருப்பது நல்லது. முதலில் எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு செல்ல முடியுமோ சிலரின் உதவியுடன் விரைந்து செல்ல வேண்டும். முடிந்தால் கடித்த பாம்பை புகைப்படம் எடுத்து சென்றால் மருத்துவர் எளிதில் சிகிச்சை செய்ய எதுவாக இருக்கும்.

நான்கு வகையான பாம்புகளில் தான் விஷத்தன்மை அதிகமாக இருக்கிறது. முக்கோணத் தன்மை கொண்ட பாம்பு என்றால் விஷத்தன்மை உடையது. பாம்பை அடித்து எடுத்துச் செல்ல வேண்டும் என அந்த சமயத்தில் நேரம் கடத்துவது ஆபத்தானது.

மேலும் கை, கால் போன்ற இடங்களில் பாம்பு கடித்தால் அதை உயர்த்தாமல் இதய மட்டத்திற்கு கீழே வைத்திருந்தால் விஷம் பரவுவது மெதுவாகும். பெரும்பாலும் பாம்புக்கு கடிக்கு மருந்துகள் அரசு மருத்துவமனையில் எளிதாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பாம்பு காடுகளில் மட்டுமல்லாமல் வயல், வரப்புகள் மற்றும் நம்மை சுற்றி நிறைய இடங்களில் இருக்கிறது. அவற்றில் இருந்து கவனமாக இருப்பதுடன் சில நேரங்களில் நம்மை கடித்து விட்டால் உயிரைக் காப்பாற்ற இந்த வழிமுறைகளை செய்யலாம்.

Next Story

- Advertisement -