திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

சினேகா-பிரசன்னா விவாகரத்தா.? உண்மையைப் புட்டுப் புட்டு வைக்கும் பயில்வான்

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி அழைக்கப்பட்ட நடிகை கே.ஆர். விஜயா அதற்கு அடுத்து அந்த பட்டத்திற்கு வேறு நடிகைகள் யாரும் வரவில்லை. அந்தக் குறையைப் போக்கினார் நடிகை சினேகா. இவரது சிரிப்புக்காக இவர் படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் அதிகம். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்கள் உச்ச நட்சத்திரங்கள் அனைவருடனும் நடித்த நடிகையாக திகழ்ந்தார்.

ஆரம்ப காலகட்டத்தில் விளம்பரப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே கதாநாயகியாகி வாய்ப்பையும் பெற்றார். விளம்பரப் படங்களில் நடிக்கும் பொழுது அந்த தொழிலதிபருடன் கிசுகிசுக்கப்பட்டார். அதில் பல பிரச்சினைகள் எழுந்த போது அதைத் தாண்டி சினிமாவில் கால்பதித்து வெற்றி பெற்றார்.

Also Read : முன்று தலைமுறையாக புன்னகை அரசி என அழைக்கப்பட்ட 3 நடிகைகள்.. சினேகாவுக்கு முன்னரே பெயர் வாங்கிய இருவர்

சினேகா நடிக்கும் பொழுது நடிகர் பிரசன்னாவை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பல வருட இடைவெளிக்குப் பிறகு சினேகா ஒரு சில படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் நடித்தது மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நடுவராகவும் தற்போது இருந்து வருகிறார். எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்த சினேகா, பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்று செய்திகள் வெளிவந்தன.

இதைப்பற்றி ஒரு பேட்டியில் பயில்வான் ரங்கநாதன், சினேகா விவாகரத்தை பற்றி உண்மையை கூறினார். பிரசன்னாவும், சினேகாவும் மிகவும் நல்ல முறையில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இவர்கள் தற்போது விவகாரத்து செய்யப் போகிறார் என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது. இதற்கு காரணம் சினேகா தொலைக்காட்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார் அதற்கு பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

Also Read : பிரசன்னாவின் முன் சினேகாவை அசிங்கமாக வர்ணித்த இயக்குனர்.. புதுமண தம்பதிக்கு ஏற்பட்ட அவமானம்

பணத்தை கேட்டதற்கு தொலைக்காட்சியில் உள்ள பெரிய மனிதர்களுடன் பிரச்சினை, அதிக சம்பளம் கேட்ட தாகவும் கூறப்படுகிறது. இதனால் தொலைக்காட்சியில் உள்ளவர்கள் சினேகாவை பழிவாங்க சில வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அதை இந்த சோசியல் மீடியா பெரிது படுத்தி அவர்களை அசிங்கப் படுத்தி வருகிறது. அதற்கு பதிலளிக்கும் விதமாக சினேகாவும் தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அது பொய் என்று நிரூபித்துள்ளார்.

sneha-cinemapettai
sneha-cinemapettai

ஒரு நடிகையாக வெற்றி பெறுவதற்கு பல அவமானங்களையும், அசிங்கங்களையும் சந்தித்து பின்னர் வெற்றி பெற்று அதையும் தாண்டி தற்பொழுது பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து வரும் இந்த நேரத்தில் சினேகாவை இப்படி அசிங்கப்படுத்துவது ஏற்க முடியாது. மீடியாக்கள் அதன் புத்தியை காட்டுகின்றன.

Also Read : சினேகாவுடன் கிசுகிசுக்கப்பட்ட 3 நடிகர்கள்.. இதில் ஒருவர் ஸ்ரீரெட்டிவுடன் தொடர்பில் இருந்தவர் ஆச்சே

Trending News