வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

சீரியல் ஹீரோவாக எண்டரி கொடுக்கப் போகும் சினேகன்.. செய்தி வாசிப்பாளரை கதாநாயகியாக தட்டி தூக்கிய சேனல்

Snehan Acted in New Serial: என்னதான் பெரிய பெரிய படங்கள் திரையரங்குகளில் வந்தாலும் தினமும் வீட்டில் இருந்தபடியே குடும்பத்துடன் சீரியலை பார்த்து நேரத்தை செலவழிப்பது தான் இல்லத்தரசிகளுக்கு ஆத்ம திருப்தியை கொடுக்கிறது. அந்த வகையில் சில முன்னணி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது நாடகங்களை கொடுத்து டிஆர்பி ரேட்டிங்கில் அதிக இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் சன் டிவியை முந்தும் அளவிற்கு விஜய் டிவி சீரியல் வித்தியாசமான கதைகளத்துடன் நுழைந்திருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் சேனல் மூலம் ஒளிபரப்பாகும் சீரியலுக்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. ஆனால் தற்போது கலைஞர் டிவியும் சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புதுப்புது இயக்குனர்கள் தயாரிப்பாளர்களை வைத்து வித்தியாசமான சீரியல்களை கொடுக்க முயற்சி எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் பவித்ரா என்ற ஒரு புது சீரியலை கொண்டு வருகிறார்கள்.

புது ஜோடிகளை சீரியலுக்கு களமிறக்கும் சேனல்

இதில் கதாநாயகனாக நடிக்கப் போவது பல பாடல்களுக்கு சொந்தக்காரராகவும், பிரபல பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் கமிட் ஆகி இருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோ ஆன பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவை பெற்றிருக்கிறார். அத்துடன் கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு மனம் ஒத்தும் தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் இவர்கள் சோசியல் மீடியாவிலும் பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சினேகனுக்கு ஜோடியாக சீரியலில் கமிட்டாகி இருப்பது செய்தி வாசிப்பாளராக இருந்து வெள்ளிதிரையில் ஒரு சில படங்களில் முகத்தை காட்டிக் கொண்டு வந்த நடிகை அனிதா சம்பத் நடிக்க உள்ளார். இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பவர்களாக இருந்தாலும் படங்களில் கிடைக்கும் வாய்ப்பை நடித்து மக்களிடம் பரிச்சயமானார்.

அதன் பின் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆரியுடன் சண்டை போட்டு வெளியேறினார். ஆனால் வெளிவந்த பிறகும் மக்கள் இவரை தூக்கிக் கொண்டாடும் விதமாக சோசியல் மீடியாவில் சமூக கருத்துக்களை பதிவிட்டு, ரீல்ஸ் மற்றும் யூடியூப் போன்ற விஷயங்களில் பிரபலமாகி இவருக்கு என்று ரசிகர்களை சம்பாதித்துக் கொண்டார்.

அப்படிப்பட்ட சினேகன் மற்றும் அனிதா சம்பத்தை வைத்து பவித்ரா என்ற நாடகத்தை எடுக்கப் போவது யார் என்றால் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி மற்றும் நினைத்தாலே இனிக்கும் தொடர்களை இயக்கிய என்.பிரியன் என்பவர்தான் இயக்கப் போகிறார். மேலும் இந்த சீரியல் கலைஞர் டிவி சேனலில் பிரேம் டைமில் போடுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மக்களின் பேராதரவை பெற்று வரும் சீரியல்கள்

- Advertisement -spot_img

Trending News