செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஒரே குடும்பத்தில் இத்தனை நடிகர்களா.. சிவாஜி குடுமபத்தையே மிஞ்சிய சூப்பர்ஸ்டார் குடும்பம்

நம் இந்திய சினிமாவில் பல நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் கால்பதித்துள்ளனர். உதாரணமாக நடிகர் விஜய், சூர்யா, பிரஷாந்த், தனுஷ், என ஒரு பெரும் லிஸ்ட் உள்ளது. இப்படிப்பட்ட வாரிசு நடிகர்களுக்கு எப்போதுமே தனி மவுசும் உண்டு. அப்படி தமிழ் சினிமாவில் அதிகமான நடிகர்கள் நடிக்க வந்த குடும்பம் என்றால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பம் தான்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழில் மட்டும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெற்றிப் பெற்ற நிலையில், தொடர்ச்சியாக இவரது மகன் நடிகர் பிரபுவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து இவரது அண்ணன் ராம்குமார், படங்களை தயாரிப்பதிலும் சில படங்களில் நடித்தும் வந்தார். இவரது மகன் ஜெயதுஷ்யந்தும் தற்போது படங்களில் நடித்து ரீ.என்ட்ரி கொடுத்து வருகிறார்.

Also Read: இந்த 5 படங்களுக்கு 5/5 ரேட்டிங் வாங்கிய சிவாஜி கணேசன்.. எல்லா படமும் வித்தியாசமான கெட்டப்

பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி சிவாஜி கணேசனின் குடும்பம் அவரது மறைவுக்கு பின்பும் அவரது குடும்பத்தில் உள்ள வாரிசுகள் தொடர்ச்சியாக நடித்து வருகின்றனர். ஆனால் சிவாஜி கணேசனின் குடும்பத்தையே மிஞ்சிய அளவிற்கு நம் இந்திய சினிமாவில் ஒரு குடும்பத்தில் மட்டும் 12 நபர்கள் நடிகர்களாக ,இயக்குனர்களாக, தயாரிப்பாளர்களாகவும் வலம் வந்து ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.

தெலுங்கில் மெகாஸ்டாராக வலம் வரும் நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்தில் தான் இவ்வளவு பேர் சினிமாவில் காலடி பதித்தவர்கள். முதலில் சிரஞ்சீவியின் மாமனாரான அல்லு ராமலிங்கம் படங்களை தயாரித்து வந்தார். பின்னர் சிரஞ்சீவி படங்களில் நடித்தார், அவரது மகன் ராம்ச்சரனும் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர். சிரஞ்சீவியின் மச்சானான அல்லு அரவிந்த் படங்களை தயாரிப்பது, இயக்குவது என உள்ளார். இவரது மகன் தான் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்.

Also Read: சிரஞ்சீவி நடித்த 4 சூப்பர் ஹிட் படங்கள்.. 47 நாட்களிலேயே எடுத்த சபதத்தை முடித்த மெகா ஸ்டார்

புஷ்பா படத்தின் முலமாக இந்தியா முழுதும் ரசிகர்களை தன்வசப்படுத்தியவர். இவரது தம்பி அல்லு சிரிஷும் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அடுத்ததாக சிரஞ்சீவியின் உடன்பிறந்தவர்களான நாகேந்திர பாபு, பவன் கல்யாண் இருவரும் படங்களில் நடித்தும், தயாரித்தும் வருகின்றனர். இதில் பவன் கல்யாண் தெலுகு சினிமாவின் பவர் ஸ்டராக வலம் வருபவர். நாகேந்திரா பாபுவின் மகனான நடிகர் வருண் தேஜ் இவரும் அங்கு வளர்ந்து வரும் நடிகராக படங்களில் நடித்து வருகிறார்.

இவருடைய தங்கையான நடிகை நிஹாரிகா படங்களில் நடித்து வந்த நிலையில், திருமணத்திற்கு பின் தன் சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இவர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். சிரஞ்சீவியின் சகோதரிகளின் ஒருவரான விஜய துர்காவுக்கு சாய் தரம் தேஜ், பஞ்ச வைஷ்ணவ தேஜ் என்ற இரு மகன்களும் நடிகர்களாக வலம் வருகின்றனர். சிரஞ்சீவியின் குடும்பத்தில் 12 பேரும் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருவது தான் ஆச்சரியம்.

Also Read: ஆதிபுரூஷ் படத்திற்கு ஆப்பு வச்ச அல்லு அர்ஜுன்.. 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம்

Trending News