வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தோண்டத் தோண்ட வெளிவரும் மர்மங்கள்.. கொலை செய்யப்பட்டு, தொங்கவிடப்பட்டாரா விஜே சித்ரா

தற்போது இருக்கும் சின்னத்திரை நடிகைகள் பலரும் பெரிய திரை ஹீரோயின்களுக்கு ஈடாக ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளனர். அந்த வகையில் மறைந்த நடிகை சித்ராவின் மீது அன்பை கொட்டிய ரசிகர்கள் ஏராளம் உண்டு. இவருடைய முல்லை கேரக்டருக்காகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை இல்லத்தரசிகள் ஆர்வத்துடன் பார்த்து வந்தனர்.

இப்படி பேரும், புகழுடன் இருந்த சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. தைரியமான பெண்ணான சித்ரா தற்கொலை செய்ய வாய்ப்பில்லை என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

அதனடிப்படையில் சித்ராவின் கணவரை போலீசார் கைது செய்தனர். தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் அவர் சித்ராவின் மரணம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். அதில் சித்ராவுக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருந்ததாகவும், அவருடைய மரணத்திற்கு அது தான் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்த சித்ராவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஹேம்நாத் தான் அவரின் மரணத்திற்கு காரணம் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் சித்ராவின் மரணம் தொடர்பாக ஆரம்பத்தில் இருந்தே பல உண்மைகளை வெளியிட்டு வந்த நடிகை ரேகா நாயர் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது சித்ரா இறந்த தினம் அன்று படப்பிடிப்பை முடித்துக் கொண்டு காரில் வரும்போது அவரை கொலை செய்து, பின்னர் ரூமில் தொங்க விட்டு தற்கொலை என்று நாடகம் ஆடுகின்றனர் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் இந்த கொலையை ஹேம்நாத் மட்டும் செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், நான்கு பேர் கொண்ட கும்பலும் இதற்கு துணையாக இருந்துள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் கூறும் இந்த விஷயங்களால் சித்ராவின் வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இருப்பினும் இறந்துபோன சித்ரா இனி திரும்பி வரப் போவது இல்லை. அதனால் அவரைப் பற்றி இதுபோன்று ஆதாரம் இல்லாத எந்த தகவல்களையும் வெளியிடவேண்டாம் என்றும் ரேகா நாயருக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Trending News