சனி நடக்கிறதால எல்லாம் தள்ளி போகுதுன்னு நினைச்சேன்.. ஆனா சனிப்பெயர்ச்சியே தள்ளி போகுது, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: ஜாதகத்தை தீவிரமாக நம்புபவர்களுக்கு இந்த வருடம் பெரும் அதிர்ச்சி செய்தி வந்திருக்கிறது. அதாவது இந்த வருடம் பிறந்ததுமே மகரம், துலாம், கடகம், கும்பம் என சம்பந்தப்பட்ட ராசிக்காரர்கள் குஷியாக இருந்தனர்.

இதற்கு காரணம் மார்ச் 29 நடக்கப்போகும் சனிப்பெயர்ச்சி தான். அதன் பிறகு நம்ம வாழ்க்கையில் எல்லாமே வெற்றி தான் என காத்திருந்தனர்.

ஆனால் அவர்கள் நினைப்பில் மண்ணள்ளி போட்ட கதையாக திருநள்ளாறு கோயில் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வருடம் நடக்க இருந்த சனிப்பெயர்ச்சி அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போயிருக்கிறது என்பதுதான்.

இதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி தான். சனிப்பெயர்ச்சிக்கு பெயர்ச்சியா, இது என்னடா சனி பகவானுக்கு வந்த சோதனை என புலம்பாத குறைதான்.

வாக்கிய பஞ்சாங்க முறைப்படி அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போவதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜோதிடர்கள் எண் கணித முறைப்படி இந்த சனி பெயர்ச்சியை கணித்துள்ளனர்.

ஆக நமக்கு நல்ல நேரமா கெட்ட நேரமா என புரியாத புதிராக இருக்கிறது. ஏழரை சனி நடக்கிறதால தான் எல்லாமே தள்ளி போகுதுன்னு நெனச்சேன்.

ஆனா சனி பெயர்ச்சியே தள்ளி போகுது. ரிட்டயர்மென்ட் ஆகும்னு பாத்தா எக்ஸ்டென்ஷன் கொடுத்துட்டாங்களே என பல மீம்ஸ் இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.

அப்படி சோசியல் மீடியாவை கலக்கும் சனிப்பெயர்ச்சி மீம்ஸ் இதோ உங்களுக்காக.

Leave a Comment