Gossip: இளம் பெண்கள் எல்லோருக்கும் சினிமாவில் பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் அந்த கனவு நிறைவேறுவது கிடையாது.
அதனால் சோசியல் மீடியாவை அவர்கள் முதலில் கையில் எடுக்கிறார்கள். அதில் விதவிதமாக போட்டோ சூட், வீடியோக்கள் என தனக்கான பப்ளிசிட்டியை உருவாக்குகின்றனர்.
அப்படித்தான் சீரியல்களில் தலை காட்டி வந்த அந்த நடிகை இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானார். இவர் வெளியிடும் போட்டோக்கள் ரீல்ஸ் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம்.
மூட்டை முடிச்சை கட்டிய நடிகை
அதுவே அவருக்கு முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை தேடி தந்தது. அதை அடுத்து ஒரு சில படங்களில் தலைகாட்டினார்.
இனிமேல் வாய்ப்பு தேடி வரும் என நினைத்த நடிகைக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. அவரும் சோசியல் மீடியாவில் உடம்பை குறைத்து தாராளமான போட்டோக்களையும் வெளியிட்டு பார்த்தார்.
எதுவும் ஒர்க்அவுட் ஆகவில்லை. அதனால் தற்போது அவர் நடிப்பே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.
இதுக்கு மேலயும் வெயிட் பண்ண முடியாது படிக்கவாவது போகலாம் என வெளிநாடு பறக்க திட்டமிட்டு இருக்கிறார். தற்போது இந்த செய்தி வெளியானதில் அவரின் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.