Memes: இப்போதெல்லாம் கையளவில் உலகம் என்ற நிலை வந்து விட்டது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை கூட திரும்பி பார்க்காமல் குனிந்த தலை நிமிராமல் போனை நோண்டிக் கொண்டிருப்பவர்கள் தான் ஏராளம்.
ரோட்டில் போகும்போது ட்ரெயின் பஸ் பயணம் என எங்கு சென்றாலும் ஃபோனில் தலையை விட்டு பார்த்துக் கொண்டிருக்கின்றனர் இன்றைய தலைமுறை. சுருக்கமாக சொல்லப்போனால் சோறு தண்ணி இல்லாமல் கூட இருந்து விடுவார்கள்.
ஆனால் போன் இல்லாமல் இருப்பது கிடையாது. அதிலும் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் யூடியூப் ஆகியவற்றில் தான் இன்றைய தலைமுறை பொழுதை கழிக்கின்றனர்.
ஆனால் இப்போது யூடியூப் தளத்தை திறந்தாலே ஏகப்பட்ட விளம்பரம் குறுக்கே வந்து வீடியோ பார்க்கும் மூடையே கெடுத்து விடுகிறது. முக்கியமான காட்சி வரும்போதுதான் இப்படிப்பட்ட இடையூறுகள் வரும்.
அதிலும் இரவு நேரத்தில் நிம்மதியா பாட்டு கேட்டுட்டு தூங்கலாம் என ஒரு பாட்டை போடுவோம். ஆனால் இடையிடையே இது போன்ற விளம்பரம் வந்து நம்மை டார்ச்சர் செய்துவிடும்.
அதிலும் அந்த விளம்பரத்தை ஸ்கிப் பண்ணவே முழிச்சுக்கிட்டு இருக்கணும். இதனால் பாட்டும் வேணாம் ஒன்னும் வேண்டாம் என அந்தப் பக்கம் போவதையே பல பேர் நிறுத்தி விட்டனர்.
இதை சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் படத்தில் கூட நக்கல் அடித்து இருப்பார்கள். அதே போல் மீம்ஸ் கிரியேட்டர்களும் இதை கிண்டல் அடித்துள்ளனர். அப்படி இணையத்தை கலக்கும் சில நகைச்சுவையான மீம்ஸ் தொகுப்பு இதோ.