Memes: உலகத்திலேயே அதிகம் வெறுக்கப்படும் உணவு என்றால் அது உப்புமா தான். அதிலும் ஆண்களுக்கு இந்த பெயரை கேட்டாலே எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வருமோ தெரியாது.

அந்த அளவுக்கு உப்புமா வேண்டாத ஒரு உணவாக இருக்கிறது. ஆனால் அவசர காலத்திற்கு இது மட்டுமே கை கொடுக்கும். திடீரென பசி எடுத்தாலோ அல்லது பவர் கட் போன்ற சமயங்களில் இதை நிமிடத்தில் செய்து முடித்து விடலாம்.

இதற்கு சர்க்கரை இருந்தாலே போதும் சாப்பிடலாம். ஆனால் வேலை சுலபமாக இருக்கிறதே என இன்றைய நவநாகரீக பெண்கள் அடிக்கடி இந்த உணவை செய்து கணவன்மார்களை கொடுமைப்படுத்தும் சம்பவமும் நடந்து வருகிறது.

இதை நெட்டிசன்கள் நொந்து போன அனுபவத்தில் மீம்ஸ் மூலம் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஆண்களின் வாழ்க்கை பெண்கள் கையில் கிடைத்த ரவா மாதிரி. அதில் கேசரி செய்வதும் உப்புமா செய்வதும் சூழ்நிலையை பொறுத்து தான்.

பரோட்டா பிரியாணி சாப்பிடறவன் எல்லாம் ஃபுட்டி கிடையாது. உப்புமாவா இருந்தாலும் மூன்று முறை கேட்டு வாங்கி வெறித்தனமாக சாப்பிடுபவன் தான் உண்மையான ஃபுட்டி என ஜாலியாக பதிவிட்டு வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் சில உப்புமா மீம்ஸ் இதோ.


சோசியல் மீடியாவில் வைரலாகும் உப்புமா மீம்ஸ்
- தீபாவளியே பிளான்ல இல்ல திண்டாடுறவனுக்கு கொண்டாட்டமா, வைரல் மீம்ஸ்
- அப்ப யாரு தான்டா புரட்டாசி விரதம் இருக்கீங்க, ட்ரெண்டிங் மீம்ஸ்
- நானே விசிட் விசால போய் வேலை கிடைக்காம வந்துருக்கேன்