வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பாடல் வரி மூலம் பதிலடி கொடுக்கும் விஜய், அஜித்.. பற்றி எரியும் சோசியல் மீடியா

வாரிசு மற்றும் துணிவு இரண்டும் ஒரே நாளில் மோத இருக்கிறது என எப்போது செய்திகள் வெளிவந்ததோ அப்போதிலிருந்தே இரு தரப்பு ரசிகர்களும் சோசியல் மீடியாவை ரணகளமாக்கி வருகின்றனர். அந்த படங்களில் இருந்து ஒவ்வொரு அப்டேட் வெளிவரும் போதும் ரசிகர்களின் சண்டை இன்னும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

அந்த வகையில் இப்போது வாரிசு திரைப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கிறது. அதேபோன்று துணிவு திரைப்படத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாடல் வெளியாகிவிட்டது. மூன்றாம் பாடலான கேங்ஸ்டர் பாடல் நாளை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு முன்பே பாடலின் வரிகளையும் பட குழு வெளியிட்டுள்ளது.

Also read: தில் ராஜுவால் விஜய்க்கு வந்த பேராபத்து.. ஊம கோட்டானாக இருந்து ஸ்கோர் செய்த அஜித்

இதுவரை வேறு எந்த படங்களுக்கும் இது போன்ற பாடல் வரிகள் முன்பே வெளியிட்டது கிடையாது. அந்த வகையில் தற்போது துணிவு படத்தின் மூன்றாம் பாடலின் வரிகள் பயங்கர சரவெடியாக இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு வார்த்தையும் வாரிசு படத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக அஜித் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

ஏற்கனவே வாரிசு படத்தின் இரண்டாம் பாடலான தீ தளபதி பாடல் அஜித்தை டார்கெட் செய்வது போல் இருப்பதாக பலரும் கூறினார். அதேபோன்று இந்த கேங்ஸ்டர் பாடலின் வரிகளும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருக்கிறது. அதிலும் துணிஞ்சா வெற்றி நமதே, பதிலடி தெரியுமடா உனக்கு சம்பவம் இருக்கு போன்ற வரிகள் வாரிசுக்கு எதிராக இருப்பதாக இப்போது பரபர விவாதங்கள் எழுந்துள்ளது.

Also read: வாரிசு ஆடியோ லாஞ்சில் பங்கேற்க போகும் 2 முக்கிய புள்ளிகள்.. இப்பவே ப்ரமோஷனை ஆரம்பித்த தளபதி

ஏற்கனவே தீ தளபதி பாடலில் வா என் புதிய எதிரியே, இது திருப்பிக் கொடுக்கும் நேரம் போன்ற வரிகள் அனல் பறந்தது. மேலும் இதன் மூலம் என்னுடைய பழைய எதிரிகளை எல்லாம் என்னுடைய ரசிகர்களாக மாற்றி விட்டேன் என்று விஜய் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்போது இந்த பிரச்சனை தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் சண்டையாக மாறி இருக்கிறது.

மேலும் இன்று விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. இதுவும் பரபரப்பை கிளப்பிய நிலையில் நாளை வெளியாக இருக்கும் துணிவு படத்தின் மூன்றாம் பாடல் எப்படி இருக்கும் என்பதை காணவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் ரிலீஸ் நாள் நெருங்க நெருங்க துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்கும் சரியான போட்டி நிலவி வருகிறது.

Also read: வாரிசு படத்தை தயாரித்துவிட்டு அல்லல்பட்டு வரும் தயாரிப்பாளர்.. பேசாம வாய வச்சிட்டு சும்மா இருந்திருக்கலாம்

Trending News