Gossip: திறமை இருந்தால் போதும் ஜெயித்து காட்டலாம் என்பதற்கு இந்த நடிகை ஒரு சிறந்த உதாரணம். எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் இவர் அசத்தி விடுவார்.
அதேபோல் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களாக இல்லாமல் வெரைட்டியான ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது அவர் விவாகரத்து நடிகருடன் நடித்துள்ள படம் திரைக்கு வருகிறது.
அந்த பிரமோஷனில் கலந்து கொண்ட முரட்டு இயக்குனருடன் அவர் பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது. சக நடிகர்களை கட்டி அணைத்து முத்தமிட்டு எதார்த்தமாக இருந்தார் அந்த நடிகை.
இதுதான் உங்க ஒரிஜினல் கேரக்டரா
ஆனால் அங்கு இருந்த உதவியாளர் ஒருவர் நடிகைக்கு கை கொடுக்க விரும்பி இருக்கிறார். ஆனால் நடிகையோ எனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி கை கொடுக்க மறுத்துவிட்டார்.
அப்ப அந்த இயக்குனர் நடிகரை எல்லாம் கட்டிப்புடிச்சிங்களே அது பிரச்சனை இல்லையா. அவங்க மூலமா உங்களுக்கு கொரோனா வராதா. இதுதான் நவீன தீண்டாமையா என இணையவாசிகள் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர்.
இது படத்திற்கு ஒரு பிரமோஷன் ஆக இருக்கிறது. இருந்தாலும் நடிகையின் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. இதனால் பட குழு தற்போது ஒரு பதட்டத்தில் இருக்கிறதாம்.