சனிக்கிழமை, பிப்ரவரி 1, 2025

எங்கும் பீகார் எதிலும் பீகார்.. தமிழ்நாட்டுக்கு பிம்பிலிக்கா பிளாப்பி, பட்ஜெட் 2025 மீம்ஸ்

Memes: 2025 – 26க்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த முறையும் பெரிதாக தமிழ்நாட்டுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது என நம் மக்களுக்கு ஒரு எண்ணம் இருந்தது.

அப்படியே ஆகட்டும் என நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பார் போல. தமிழ்நாட்டுக்கு எந்த சலுகைகளும் இல்லை.

தொடர்ந்து தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதை முதல்வர் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்த்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

அதே சமயம் பீகாரில் தேர்தல் வர இருப்பதால் அங்கு மட்டும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 12 லட்சம் வரை வருமானம் பெறும் தனிநபர்கள் வரி செலுத்த தேவையில்லை.

இது தவிர இன்னும் பல முக்கிய அம்சங்கள் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டை புறக்கணித்த நிதி அமைச்சரை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

எங்கும் பீகார் எதிலும் பீகார் கடைசியில் தமிழ்நாட்டுக்கு பிம்பிலிக்கா பிளாப்பி தான். என்ன நிம்மி மேடம் இதெல்லாம் என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

அப்படி சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி கொண்டு இருக்கும் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் மீம்ஸ் இதோ.

Trending News