Memes: 2025 ஆரம்பித்து நான்காவது நாள் முடிய போகிறது. ஆனால் இன்னும் பாதி பேருக்கு காலண்டர் கூட கிடைக்கவில்லை.
இதுல எங்கிருந்து சந்தோஷம் வரப்போகுது என புலம்பாத குறை தான். ஆரம்பிக்கும் போது முதல் நாள் நல்லாத்தான் இருக்கு. இரண்டாவது நாளிலிருந்து பழைய குருடி கதவைத் திறடி என்ற நிலைதான்.
ஆனாலும் இந்த வருஷம் வாழ்க்கை மாறிவிடும் என அனைவரும் ஓட்டத்தை தொடங்கி விட்டார்கள். இதை வழக்கம் போல நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வைரல் செய்து வருகின்றனர்.
இந்த வருஷம் ரெய்டு வர்ற அளவுக்கு சம்பாதிக்க முடியல என்றாலும் இன்கம் டேக்ஸ் கட்ற அளவுக்கு சம்பாதிக்கணும் கடவுளே.
இந்த புது வருஷத்துல உங்க வாழ்க்கையில எந்த கெட்ட பழக்கத்தை விடனும் ப்ரோ. நான் வாழ்றதையே விட்றலான்னு இருக்கிறேன் ப்ரோ போன்ற மீம்ஸ் வைரலாகி வருகிறது.
இது ஒரு புறம் இருக்க ஜோதிடர்கள் குறிப்பிட்ட ராசிகளுக்கு ஆஹா ஓஹோ என பலன்களை சொல்லி வருகின்றனர். சில ராசிகளுக்கு போன வருஷத்தை விட இந்த வருஷம் மோசம் என்ற பலன் தான் கிடைக்கிறது.
இதுதான் இப்போது தொலைக்காட்சி சேனல்களிலும் வைரல் விவாதமாக இருக்கிறது. இருக்கிற இம்சைல இவனுங்க வேற என்பது தான் நம்முடைய மைண்ட் வாய்ஸ். இது தொடர்பான சில மீம்ஸ் இதோ.