திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

அஜித்குமார் நஹி.. பத்மபூஷன் அஜித்குமார் போலோ, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: நேற்றிலிருந்து சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் அஜித் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பத்மபூஷன் விருதுதான்.

ajith-padmabhushan
ajith-padmabhushan

மிகவும் உயரிய மற்றும் கவுரவமான விருதான பத்மபூஷன் அவருக்கு கிடைத்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ajith-padmabhushan
ajith-padmabhushan

அதேபோல் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ajith-padmabhushan
ajith-padmabhushan

அதிலும் அஜித் ரசிகர்கள் இதை பெரும் மகிழ்ச்சியோடு வைரல் செய்து வருகின்றனர். அதே சமயம் விஜய் ரசிகர்களை தாக்கும் வகையில் அவர்களுடைய கொண்டாட்டங்களும் இருக்கிறது.

ajith-padmabhushan
ajith-padmabhushan

இந்த விருதுக்கு பின்னால் சில அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. அதே போல் ஒன்றிய அரசு அஜித் ரசிகர்களின் வாக்குகளை பெறுவதற்காக இந்த விருதை கொடுத்துள்ளதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது.

ajith-padmabhushan
ajith-padmabhushan

அதே சமயம் இந்த விருது கிடைப்பதற்கு காரணம் விஜய் தான் என தளபதியின் ரசிகர்கள் ஒரு பக்கம் ட்வீட் செய்து வருகின்றனர். இப்படியாக நேற்றிலிருந்து பல மீம்ஸ் இணையத்தை சுற்றி வருகிறது.

ajith-padmabhushan
ajith-padmabhushan

அதில் அஜித்துக்கு ஆதரவாக பல ட்வீட் இருக்கிறது. அதேபோல் கலைத்துறையில் இவர் எந்த சாதனையும் செய்யவில்லை. இவருடைய படம் சரியான நேரத்திற்கு கூட வெளிவராமல் தாமதமாகிறது.

ajith-padmabhushan
ajith-padmabhushan

அவருக்கு எதற்கு விருது தர வேண்டும் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் நடிப்பை தாண்டி அவர் பல திறமைகள் கொண்டவர். இந்த விருது அவருக்கு சரியானது என ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இப்படியாக சோசியல் மீடியா பயங்கர ரணகளமாக இருக்கிறது. அப்படி இணையத்தில் வைரலாகும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

Trending News