புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சென்னை கலெக்டர யாராவது எழுப்புங்கப்பா.. லீவு இருக்கா இல்லையா.? வைரல் மீம்ஸ்

Memes: கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. ஆனால் இன்று எல்லா பக்கமும் கன மழை வெளுத்து வாங்குகிறது. அதிலும் சென்னை நேற்று மேகமூட்டத்துடன் இருந்தது.

rain-memes
rain-memes

ஆனால் இன்று காலையிலேயே மழை தொடங்கி விட்டது. ஏற்கனவே குளிரில் சென்னை ஊட்டி போல் இருந்த நிலையில் இன்று நிலைமை இன்னும் மோசம். அதிலும் பிள்ளைகள் பள்ளிக்கு சென்றவுடன் தான் இந்த மழை ஆரம்பித்தது.

rain-memes
rain-memes

இதனால் அவர்களை மாலை வீட்டுக்கு அழைத்து வருவதில் பெற்றோர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. மேலும் நாளையில் இருந்து கனமழை தொடங்கும் என்றும் டிசம்பர் ஒன்றாம் தேதி வரை இது தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

rain-memes
rain-memes

அது மட்டும் இன்றி தமிழ்நாடு முழுக்க ரெட் அலர்ட் என்ற சூழல் உள்ளது சென்னையிலும் ஆரஞ்சு அலட் கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும் நாகை கடலூர் மயிலாடுதுறை என பல மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

rain-memes
rain-memes

ஆனால் சென்னையில் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இருப்பினும் பெற்றோர்களும் மாணவர்களும் செய்தி சேனல்களை இடைவிடாது பார்த்து வருகின்றனர். அதில் நெட்டிசன்கள் வழக்கம் போல மீம்ஸ் போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

rain-memes
rain-memes

எல்லா ஊர்லயும் விடுமுறை அறிவிச்சாச்சு இந்த சென்னை கலெக்டர யாராவது எழுப்புங்கப்பா என அலப்பறை செய்து வருகின்றனர். இன்னும் சிலர் ஆபீஸ் போகும் குழந்தைகளுக்கு எல்லாம் லீவு இல்லையா என சோகத்தை கொட்டி வருகின்றனர். இப்படி இணையத்தை கலக்கும் சில மீம்ஸ் இதோ.

Trending News