Memes: கடந்த சில நாட்களாக சீனாவில் பரவி வரும் புது வைரஸ் பற்றிய செய்தி அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. எங்க இது மற்ற உலக நாடுகளுக்கும் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.
இப்படித்தான் 2019 இறுதியில் சைனாவில் பரவிய கொரோனா 2020 ஆம் ஆண்டு மற்ற நாடுகளுக்கு பரவியது. இதனால் ஏகப்பட்ட உயிரிழப்புகளை நாம் சந்தித்தோம்.
அதன் பிறகு தடுப்பூசி செலுத்தப்பட்டு இதை கட்டுப்படுத்தினார்கள். ஆனால் அந்த தடுப்பூசி கூட பின் விளைவுகளை கொண்டு வரும் என செய்திகள் வெளியாகி அச்சுறுத்தியது.
இப்போது பார்த்தால் புது வைரஸ் தொற்று மற்ற நாடுகளுக்கு பரவுமா என பெரும் விவாதமே நடக்கிறது. ஆனால் மக்கள் இதனால் அச்சப்பட தேவையில்லை என சுகாதார துறை கூறுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க நெடிசன்கள் வழக்கம் போல சீனாகாரர்களை கழுவி ஊற்ற தொடங்கிவிட்டனர். ஏற்கனவே உங்களால ரெண்டு வருஷம் லாக்டவுன் போட்டு படாதபாடு பட்டோம்.
அப்ப கூட திருந்த மாட்டீங்களாடா நீங்க. கண்டதையும் சாப்பிட வேண்டியது புதுப்புது வைரஸை பரப்ப வேண்டியது.
இந்த தடவை வருஷ தொடக்கத்திலேயே ஆரம்பிச்சுட்டாங்க சப்ப மூக்கனுங்க என மீம்ஸ் போட்டு பங்கம் செய்து வருகின்றனர். அது தொடர்பான சில மீம்ஸ் தொகுப்பு இதோ.