Memes: பெண்கள் எல்லாம் விதவிதமாக சமைத்து அசத்திய காலம் போய் இப்போது சுடுதண்ணியா அதை எப்படி வைக்கிறது என கேட்கும் நிலை வந்து விட்டது.

அதிலும் இப்போது எல்லாமே ஆன்லைன் மூலம் வீட்டுக்கு வந்து விடுகிறது. காலையில் எழுந்து காபி குடிப்பதில் இருந்து எல்லாத்தையும் ஆர்டர் செய்கிறார்கள் நவநாகரிக பெண்கள்.

இதனால் கணவர்களின் பாடு திண்டாட்டமாக இருக்கிறது. இதை நீயா நானா, தமிழா தமிழா போன்ற நிகழ்ச்சிகளில் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க நாங்கள் டாடியின் குட்டி இளவரசிகள் என சொல்லிக்கொண்டு சிலர் செய்யும் அலும்பு ஓவராக இருக்கிறது. சமையல் என்ற பெயரில் புதுப்புது டிஷ் ஆக கண்டுபிடித்து விழி பிதுங்க வைக்கின்றனர்.

ஒரு வழியா சமையல் எல்லாம் கத்துக்கிட்டாச்சு. ஆனா இந்த பூரிக்கு எப்படி காத்து அடிக்கணும்னு தெரியலையே.

நூடுல்ஸும் சட்னியும் சேர்ந்து ஒரு ரெசிபி செஞ்சு இருக்கேன். அதுக்கு பேரு நுட்னி எனத் தொடங்கி பல சோசியல் மீடியா அலப்பறைகள் வைரலாகி வருகிறது.

அப்படி இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் குட்டி இளவரசிகளின் சில நகைச்சுவை மீம்ஸ் தொகுப்பு இதோ.